Mumbai indians அணியில் மோதல் உச்சம்? நிர்வாகத்திற்கு எதிராக திரும்பிய இளம் வீரர்..ரோகித்துக்கு ஆதரவு

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருப்பது அந்த அணியில் உள்ள எந்த வீரருக்கும் பிடிக்கவில்லை என்பது தற்போது தெளிவாக தெரிகிறது. நேற்று வந்த சின்ன பையன் கூட எங்களுக்கு ரோஹித் சர்மா தான் சிறந்த கேப்டன் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு வரும் சீசன் எப்படி இருக்க போகிறது. வீரர்கள் முறையான ஆதரவை தருவார்களா என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து பும்ரா, சூரியகுமார் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரோகித் சர்மாவை வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் நான் எந்த அணியில் இருந்தாலும் சரி அணிக்காக தான் நான் விளையாடுவேன். அணி வெற்றி தான் எனக்கு மிகவும் முக்கியம்.
என்னுடைய இந்த கிரிக்கெட் பயணம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற சிறந்த நோக்கத்துடன் நான் விளையாடுகிறேன். என்னுடைய இந்த கிரிக்கெட் பயணம் சிறந்த அமைந்ததற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு காரணம் என்று சொல்லலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணி என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறதோ அதை செய்வதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்ப காலத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிதான் எனக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி எனக்கு ஒரு நல்ல இடமாக விளங்கி இருக்கிறது.
இதற்கு எல்லாம் முக்கிய காரணம் எங்களுடைய கேப்டன் ரோகித் சர்மா தான். ரோகித் சர்மா போல் ஒரு சிறந்த வெற்றிகரமான கேப்டனை பார்க்க முடியாது. என்னுடைய சிறு வயது ஹீரோவின் ரோகித் சர்மாவும் ஒருவர். ரோகித் சர்மா எங்கள் அனைவரையும் நன்றாக பார்த்துக் கொள்வார். எங்களுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாமல் வழி நடத்துவார். ரோகித் சர்மாவுக்கு கீழ் நான் விளையாடியதற்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் சிறப்பாக விளையாடியதால் தான் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்ற பிறகு என்னுடைய பேட்டிங் உத்தியில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் மனதளவிலும் கிரிக்கெட் அளவில் கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து இருக்கிறேன். என்னுடைய பயிற்சியாளர் சலாம் தான் எனக்கு பல உதவிகளை செய்து வருகிறார். நான் ஏதேனும் சாதித்தால் அது என் பயிற்சியாளரின் போய் சேரும் என்றும் அவர் கூறினார்.