வாழ்த்துக்கள் தம்பி.. ஆனா பெஞ்சில் தான் இருப்பிங்க ஏன்னா.. சர்பராஸ் வாய்ப்பு பற்றி இர்பான் பதான்
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆரம்பத்தில் வெற்றியை கையில் வைத்திருந்த இந்தியா கடைசியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. எனவே 2வது போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது.
இருப்பினும் அதில் கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இரண்டு நட்சத்திர முதன்மை வீரர்கள் காயத்தால் விலகியுள்ளது இந்தியாவுக்கு பெரிய அடியை கொடுத்துள்ளது. அதே போல விராட் கோலியும் விளையாட மாட்டார் என்பதால் இப்போட்டியில் ரஜத் படிடார் அல்லது சர்பராஸ் கான் ஆகிய 2 வீரர்களில் யாராவது ஒருவருக்கு அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெஞ்ச் தான்:
சொல்லப்போனால் ரஜத் படிடார் உள்ளூர் கிரிக்கெட்டில் 4000 ரன்களை 45.97 என்ற சராசரியில் மட்டுமே குவித்துள்ளார். ஆனால் சர்பராஸ் கான் 66 இன்னிங்ஸில் 3912 ரன்களை 69.85 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ளார். எனவே சமீபத்திய இங்கிலாந்து லய்ன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இருவருமே சதமடித்து நல்ல ஃபார்மில் இருந்தாலும் அதிக சராசரியை கொண்டிருப்பதால் படிடாருக்கு பதிலாக சர்ப்ராஸ் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடினமாக போராடிய சர்ப்ராஸ் ஒரு வழியாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்துவதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். இருப்பினும் அவருக்கு முன்பே தேர்வாகி பெஞ்சில் இருந்து வரும் ரஜத் படிடாருக்கு தான் இம்முறை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கும் இர்பான் பதான் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“முதலில் உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணியில் தேர்வானதற்காக சர்பராஸ் கானுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இது நாட்டுக்காக விளையாடுவோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் கடுமையாக போராடி ரன்களை குவிக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும் கிடைத்த சிறிய வெற்றியாகும். அவர் தேர்வானதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்”