காங்கிரஸ் வாக்குறுதி : பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி..!
இந்திய நாட்டிற்கான நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதனால் அனைத்து தரப்பு கட்சிகளும் நாடு முழுவதும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கி உள்ளனர். இதற்காக போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வருகின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சி பெண்களை ஈர்க்கும் வகையிலான ஐந்து அதிரடி வாக்குறுதிகளை தெரிவித்துள்ளது. அதில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
மத்திய அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்காக நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாவித்திரிபாய் புலே பெயரில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். ஒவ்வொரு பஞ்சாயகத்திலும் பெண்களின் சட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் வகையில் சிறப்பு பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு திட்ட பணியாளர்களுக்கான மாத ஊதியத்தில் மத்திய அரசின் பங்கு இரட்டிப்பாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.