ஆபத்தான நோய்களை வரவைக்கும் மலச்சிக்கல்.., எப்படி சரிசெய்வது?- மருத்துவரின் விளக்கம்
பொதுவாக மலச்சிக்கலானது நம்மில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய மிகவும் பொதுவான ஒன்றாகும்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கத்தால் பெரும்பாலான மக்கள் இந்த வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அந்தவகையில் மலச்சிக்கல் பிரச்னையை போக்க மருத்துவர் ஷர்மிகா சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.
மருத்துவர் கூறும் விளக்கம்
1. காலை 6 மணிக்கு 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்து பின் வெதுவெதுப்பான நீரை குடித்து வரலாம்.
2. காலை உணவாக பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
3. இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிட பழகிக்கொள்ளுங்கள்.
4. தினமும் 5 நிமிடம் யோகா பயிற்சியில் மலாசனம் செய்யவும்.
5. வெதுவெதுப்பான நீரில் சப்ஜா விதைகளை கலந்து குடித்து வரலாம்.
6. வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வரலாம்.
7. நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை இரவு உணவாக எடுத்துக்கொள்ளவும்.
8. மன அழுத்தம் இல்லமால் இருக்க வேண்டும். ஏனெனில் மலச்சிக்கலுடன் இது தொடர்புடையது.
9. நல்ல உறக்கம் அவசியம். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை நன்றாக தூங்குங்கள்.