போதை கடத்தல் வியாபாரியுடன் தொடர்பா? நமீதா கணவரை பிரிகிறாரா? பயில்வான் சொன்ன ஷாக் நியூஸ்!
நடிகை நமீதா காதல் கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை நமீதா 2017ம் ஆண்டு தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2022ம் ஆண்டு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்தது.
நடிகை நமீதா குஜராத்தின் சூரத்தில் பிறந்தார், மாடலிங் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்ஙகிய இவர், 2002 ஆம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் கால்பதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து,2004 ஆம் ஆண்டில், விஜயகாந்க்கு ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படத்தில் நடித்தார்
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ள நமீதா, விஜய், அஜித், நந்தமுரி பாலகிருஷ்ணா, மோகன்லால் மற்றும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நமீதா, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கணவரை பிரிகிறாரா? இந்நிலையில், நடிகை நமீதா குறித்து பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சியான ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதில், ஏழு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரை நமீதா விவாகரத்து செய்ய உள்ளதாக வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார்.நடிகைகளில் காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டது நமீதா மட்டும் தான். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இருவரும் பிரிய உள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியை நான் நம்பவில்லை என்றாலும் இந்த தகவலை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். போதை கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஒரு கோடீஸ்வர தொழிலதிபருடன் உறவில் இருப்பதாகவும், அவரின் அந்த ராஜபோக வாழ்க்கைக்கு மயங்கிவிட்டதாகவும், இதனால், தனது காதல் கணவரை அவர் பிரிய முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.
இதெல்லாம் ஒரு பொழப்பா: ஆனால், இதுகுறித்து நமீதா தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை, ஒரு வேலை இது போன்று ஒரு செய்தி இணையத்தில் பரவி வருவது, நமீதாவிற்கு தெரியவில்லை என்றாலும், இந்த வீடியோவிற்கு பிறகாவது, இந்த செய்தியை பார்த்த பிறகாவது இதற்கு நமீதா பதில் அளிக்க வேண்டும். ஏன் என்றால், வட நாட்டில் இருந்து தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டு, அரசியலிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். நடிகை நமீதா தனது பாதுகாப்புக்காகவே பாஜகவில் இணைந்தார். ஆனால், கட்சியில் என்ன செய்கிறார், என்ன பொறுப்பு என்றெல்லாம் நமக்கு தெரியாது என்று பயில்வான் அந்த பேட்டியில் நமீதா குறித்து குண்டை தூக்கி போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நல்ல இருக்கும் குடும்பத்தை பற்றி இப்படி சொல்வது சரியா என்றும், இதெல்லாம் ஒரு பொழப்பா என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.