வைட்டமின் ஈ, ஒமேகா 6 இருக்கு- வறண்ட தலைமுடிக்கு விளெக்கெண்ய் கண்டீஷனர்
மன அழுத்தம் மற்றும் மாசுபாடு ஆகியவை கூந்தலுக்கு அழிவை ஏற்படுத்துகின்றன, இதனால் நம் தலைமுடி உயிரற்றதாகவும், மெல்லியதாகவும், மந்தமாகவும் இருக்கிறது.
ஆனால் ஒரு சூப்பர் ஆயில், உங்கள் வீட்டில் இருக்கும்போது, விலை உயர்ந்த தயாரிப்புகளில் இனி நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.
4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் விளக்கெண்ணையை மருத்துவத்துக்கும் இயற்கையான அழகுப் பராமரிப்பிற்காகவும் பயன்படுத்துகிறார்கள். காரணம் அதில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 6 மற்றும் 9 அதிகளவில் உள்ளது. அவை சரும ஆரோக்கியத்துக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது.
தலையில் சிறிய அளவில் வழுக்கை இருந்தால், விரல் நுனியில் சிறிது எண்ணையை எடுத்து, வழுக்கை இருக்கும் இடத்தில் ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் மசாஜ் செய்தால் வழுக்கை விழுந்த இடத்தில் புதிய முடி வளருவதை கண்கூடாகக் காணலாம்.