சர்ச்சைப் பேச்சு: கார்த்தி சிதம்பரத்திற்கு காங்கிரஸ் மாநில தலைமை நோட்டீஸ்!
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், பிரதமர் மோடியுடன் ராகுல்காந்தியை ஒப்பிட முடியாது என கூறியுள்ளார்.
மேலும்,மோடியை புகழ்ந்து கூறி ராகுல் காந்தியை தாழ்த்தி பேசியதாக சர்ச்சை எழுந்தது.
: 4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற தலைமை செயல் அதிகாரி – யார் இந்த சுசனா சேத்?
இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கார்த்தி சிதம்பரம் மீது தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தொடர்ந்து, நாளை(ஜன.10) காலை 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.