புற்றுநோய் அறிவிப்புக்கு பின்னரும் பிரித்தானிய இளவரசியை தொடரும் சர்ச்சை
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் காணொளி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அந்த காணொளி பொய்யானது என்று சமூக ஊடகத்தில் ஆதாரங்களை சிலர் பட்டியலிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை (22) காணொளி ஒன்றை வெளியிட்ட வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், தமக்கு புற்றுநோய் உறுதி செய்துள்ளதாகவும், கீமோ சிகிச்சை முன்னெடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இளவரசிக்கு எதிரான கருத்துகள்
இதனையடுத்து, உலகெங்கிலும் இருந்து அவருக்கு ஆதரவும் ஆறுதலும் பெருக்கெடுத்துள்ள நிலையிலும் சமூக ஊடகங்களில் அவருக்கு எதிரான கருத்துகள் பரவலாக மீண்டும் வலம்வரத் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே அன்னையர் தின புகைப்படத்தை திருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் மன்னிப்பும் கோரியுள்ளார். தற்போது, அவர் வெளியிட்டுள்ள காணொளியும் உருவாக்கப்பட்டது, புதிய தொழில்நுட்பத்தால் அது சாத்தியம் என்றும் சமூக ஊடகத்தில் விசாரணையை சிலர் தொடங்கியுள்ளனர்.
இளவரசி கேட் மிடில்டன் வெளியிட்ட காணொளியில் ஏன் இலை கூட அசையவில்லை என்றும் அவரது கன்னக்குழி இந்த காணொளியில் இல்லையே என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
அரண்மனை நிர்வாகம் நடவடிக்கை
வெளியான காணொளி பொய்யானது என குறிப்பிட்டுள்ள சிலர், கீமோ சிகிச்சையானது ஆபத்தானதல்ல என்றும் குறிப்பிட்டதுடன் புகைப்பட சர்ச்சையில் கேட் மிடில்டன் சிக்கிய பின்னர், அவர் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இதனாலேயே, பொய்களை பரப்பும் பலர் ஆதாயம் பெறுவதாக சிலர் தெரிவித்த நிலையிலும் அரண்மனை நிர்வாகம் சர்ச்சைக்கு எதிரான நடவடிக்கை எடுக்க தாமதமானதன் காரணத்தினாலேயே கேட் மிடில்டனை விடாது சிக்கல் துரத்துவதாக கூறப்படுகின்றது.