குக் வித் கோமாளி 5 முழு போட்டியாளர்கள் லிஸ்ட்! ஷோவுக்கு வரும் எதிர்பார்க்காத பிரபலங்கள்
குக் வித் கோமாளி ஷோ தொடங்குவதை இந்த வருடம் விஜய் டிவி பல மாதங்கள் தாமதம் செய்ததால் அடுத்த சீசன் வருமா இல்லையா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.
நடுவராக இருந்த செப் வெங்கடேஷ் பட் வெளியேறிவிட்ட நிலையில் புது நடுவராக மாதம்பட்டி ரங்கராஜை களமிறக்கி இருக்கிறது விஜய் டிவி.
செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் விமானத்தில் வந்து இறங்கும் ப்ரோமோவை வெளியிட்டு குக் வித் கோமாளி 5 ஷோவை விஜய் டிவி நேற்று அறிவித்தது.
போட்டியாளர்கள்
இந்நிலையில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறாரகள் என்கிற தகவல் கசிய தொடங்கி இருக்கிறது.
பிரபல youtuber மற்றும் ஹோட்டல் ரிவியுவரான இர்பான் குக் வித் கோமாளிக்கு வருவது உறுதியாகி இருக்கிறதாம், மேலும் நடிகர் விடிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா போன்றவர்களும் போட்டியாளராக வர இருக்கிறார்களாம்.
மேலும் இளம் ஹீரோயின்கள் கண்டிப்பாக வேண்டும் என்பதால் நடிகை திவ்யா துரைசாமி உடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.