Cooking Tips: இல்லத்தரசிகளுக்கான நச்சுன்னு 10 சமையல் டிப்ஸ் இதோ..!

சமையல் என்பது முழு மனத்துடன் ஈடுபாடு காட்டி செய்ய வேண்டிய ஒரு அருமையான கலை. இதில், பல்வேறு நுணுக்கங்கள் அடங்கியுள்ளன. சமையல் செய்வதை விட பயன்படுத்தப்படும் பொருட்கள் கெட்டுபோகாமல் பாதுகாப்பதும் நமது கடமைதான். அந்த வகையில் இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பயனுள்ள குறிப்புகளை இங்கு காணலாம்.

  • மழை காலங்களில் உப்பில், ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமலிருக்க சிறிது அாிசியை கலந்து வைக்கலாம்.
  • வறுத்த ரவையில் தோசை சுட்டால் தோசை மொறு மொறுவென்று இருக்கும்.
  • மசாலா பொருட்கள் மணமாகவும், ருசியாகவும் இருப்பதால் அன்றாடம் சமையலில் பயன்படுத்தக் கூடாது. மசாலா பொருட்கள் ஜீரண நீர் சுரப்பை பாதிக்கும்.
  • உணவு பொருட்களுக்கு மஞ்சள் பொடி நல்ல நிறம் கொடுப்பதுடன், ஆரோக்கியம் மற்றும் கிருமி நாசினியாகவும் உதவுகிறது.
  • பலகாரங்கள் நமத்துப் போகாமலிருக்க பாத்திரங்களின் அடியில் உப்பு பொட்டலம் ஒன்றை போட்டு வைக்கலாம்.
  • இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால் அரிசியைக் கொதிநீரில் ஊறவைத்து அரைத்துப் பாருங்கள். மாவு சீக்கிரமாக அரைந்துவிடும்.
  • வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை வட்டமாக வெட்டிய பின், தோலை உரித்தால் வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.
  • பாகற்காயில் கொஞ்சம் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால், அதிக கசப்பு இருக்காது. பொரியலும் சுவையானதாக இருக்கும்.
  • காய்கறிகளை வதக்கும்போது, எண்ணெயில் அரை ஸ்பூன் சாலட்டைப் போட்டுவிட்டு வதக்கிப் பாருங்கள். எண்ணெய் குறைவாக விட்டால் போதும். அடிப்பிடிக்காமல் சீக்கிரம் வதங்கும். உப்புடன் வதங்குவதால் காய் அருமையாக இருக்கும்.
  • இட்லி மீதமாகிவிட்டால் நன்கு உதிா்த்து ஏலக்காய் பொடித்து 5 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு தேங்காய்த் துருவலும் சா்க்கரையும் சோ்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *