பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கூல் சுரேஷ்.. முதலில் செய்த காரியம் என்ன தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்து தற்போது 7வது சீசனை நடத்தி வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த சீசன் துவக்கத்தில் இருந்தே பல எதிர்பாராத திருப்பு முனைகள் அரங்கேறியது. பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என வீட்டைபிரித்தது முதல், பிரதீப் எலிமினேஷன் வரை பல விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 18 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் சீசன் தற்போது 11 பேருடன் நடந்து கொண்டிருக்கிறது.
100 நாட்களை டார்கெட்டாக வைத்து நடக்கும் இந்த போட்டி தற்போது 78 நாளை கடந்துள்ளது. இந்த போட்டியில் வீட்டினாரால் நாமினேட் செய்யப்படும் நபர்கள் வார இறுதியில் நடக்கும் கமல்ஹாசன் எபிசோடில், மக்கள் ஓட்டின் அடிப்படையில் போட்டியாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
அந்த வகையில், போட்டியின் ஆரம்பத்தில் முழு எனெர்ஜியுடன் விளையாடி வந்த கூல் சுரேஷ் போக போக நான் வீட்டுக்கு போக வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு கட்டத்தில் என்ன விடுவீங்களா மாட்டேங்களா என்று பிக்பாஸ் வீட்டின் சுவரை ஏறி குதிக்க முற்பட்டார் கூல் சுரேஷ். இதனால் கடந்த சனிக்கிழமை கூல் சுரேஷ் பிக்பாஸ் போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.
View this post on Instagram
போட்டியில் இருந்து வெளியே வந்த கூல் சுரேஷ், நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து இருக்கிறார். அவருக்கு சந்தானம் மாலை போட்டு தனது பாராட்டை தெரிவித்தார். இருவரும் சந்தித்துக்கொண்ட அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.