Corn Recipes: ஈவ்னிங் செய்து சாப்பிட ஏற்ற டேஸ்டான கார்ன் பக்கோடா செய்வது எப்டினு பார்ப்போம்!
கார்ன் பக்கோடா மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஸ்நாக் ரெசிபி ஆகும். நீங்கள் இதை 30 நிமிடங்களுக்குள் செய்து, விருந்தினர்களுக்கு கொடுக்கலாம். இந்த சூடான சோள பக்கோடா மழை மற்றும் குளிர்காலங்களில் உங்கள் மாலை நேர டீ/காபிக்கு சிறந்த துணையாகவும் இருக்கும். பக்கோடா செய்ய ஸ்வீட் கார்ன், அல்லது நீங்கள் விரும்பினால் வழக்கமான நாட்டுச் சோளத்தையும் பயன்படுத்தி செய்யலாம். வழக்கமான பக்கோடாவைப் போலவே, இதற்கும் சில மசாலாப் பொடிகள் மற்றும் மாவுக்கு பைண்டிங் ஏஜெண்டுகள் தேவைப்படும். சோள பக்கோடாவை எப்படி எளிதாக செய்வது என்பது குறித்து பார்ப்போம் வாங்க.
தேவையான பொருட்கள்
ஸ்வீட் சோளம் – 1 (வேகவைத்தது)
வெங்காயம் – 2 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 நறுக்கியது
கறிவேப்பிலை நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
தண்ணீர்
எண்ணெய் – பொரிப்பதற்கு
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
கடலை மாவு – 1 கப் (250 மி .லி)
அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் சோளம், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். பின்னர், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும். அடுத்து கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்துவிடவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தயார் செய்த மாவை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். கார்ன் பகோடா தயார்!