Cortisol : கார்டிசால் என்றால் என்ன? இந்த திரவம் சுரப்பது உங்கள் உடலில் என்ன பாதிப்பை உண்டாக்குகிறது?
சர்க்கரை அதிகம் சாப்பிடும் விருப்பம் ஏற்படுவது முதல் மனநிலை மாற்றங்கள் வரை அதிக கார்டிசால் சுரப்பும், மனஅழுத்ததின் அறிகுறிகள்எ என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
நாம் அதிகப்படியான மனஅழுத்ததில் இருக்கும்போது, பயம், பதற்றம் அதிகரிக்கிறது. அப்போது கார்டிசால் வெளியாகிறது. கார்டிசால் சமமின்மை மற்ற ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோனிள் சமநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பெண்களின் மாதவிடாயில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மாதவிடாய்க்கு முந்தைய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. எனவே கார்டிசாலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
நமக்கு எப்போதும் தாகம் எடுத்தக்கொண்டே இருக்கும். நம் உடலில் போதிய நீர்ச்சத்து இருந்தாலும் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும். நா முழுவதும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கும் நிலை ஏற்படும்.
நமக்கு இனிப்பு மற்றும் சர்க்கரை என அனைத்தும் நாள் முழுவதும் சாப்பிட தோன்றும். நமக்கு வயிறு நிறைந்த உணர்வு இருந்தாலும், இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றிக்கொண்டே இருக்கும்.
மனநிலையில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் மனநிலை பாதிக்கப்படும். இது உடலில் உள்ள அதிக கொழுப்பால் ஏற்படுகிறது.
இரவில் தூக்கம் வருவதில் சிரமம் ஏற்படும். காலையில் எழுந்தவுடன், அதிர்ச்சி மனநிலை ஏற்படும்.
எடை மேலாண்மை செய்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதுவும் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயம் ஆகும்.
கார்டிசால் என்றால் என்ன?
கார்டிசால் என்பது 2 அட்ரினல் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் ஸ்டீராய்ட் ஹார்மோன். இந்த சுரப்பிகள் இரண்டு சிறுநீரகத்திற்கு மேலும் இருக்கும். நீங்கள் மனஅழுத்ததில் இருக்கும்போது, உங்களின் ரத்த ஓட்டத்தில் அதிகளவில் கார்டிசால் சுரக்கிறது. உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு இந்த கார்டிசால் சமமமின்மை மிகவும் அவசியம். அதிகமாக கார்டிசால் சுரப்பதும், குறைவாக சுரப்பதும் உடலில் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.