மலத்தை மறுசுழற்சி செய்து சமையலுக்கு பயன்படுத்தும் தம்பதி! இப்படியும் பணத்தை சேமிக்கலாமா?
அமெரிக்காவில் உள்ள தம்பதி ஒருவர் தங்களது மனித கழிவுகளை மறுசுழற்சி செய்து சமையலுக்கு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
மனித கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தம்பதி
அமெரிக்காவை சேர்ந்த ஜான்(John) மற்றும் அவரது மனைவி Fin, தங்களது மலக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சமையலுக்கு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர், இது முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் போஸ்ட் அறிக்கைப்படி, இந்த தம்பதி மனித கழிவுகளை நேரடியாக வீட்டிலேயே இயற்கை உயிர் வாயுவாக மாற்றி சுற்றுச்சூழலுக்கு தீமை ஏற்படாத வகையில் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக டிக்டாக்கில் @BelovedCabin என்ற பெயரில் 1,57,000 பார்வையாளர்களை கொண்ட ஜான், நாங்கள் எங்களது மலத்தை சமையல் எரிவாயுவாக மாற்றி பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக தங்கள் 12 ஆண்டுகளாக வசிக்கும் 500 சதுர அடி கிராமப்புற வீட்டில் சிறந்த கட்டமைப்பை உருவாக்கி இருப்பதாகவும், மலம் கழித்துவிட்டு கழிவறையை சுத்தப்படுத்திய(flush) உடனே அவை அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சாதனத்திற்குள் சென்று சுத்தமான ஆற்றலாக மாறிவிடுகிறது என தெரிவித்துள்ளார்.
செலவான தொகை
இதற்கு 1500 டொலர்களை விடவும் குறைவாகவே செலவானதாக ஜான் தெரிவித்துள்ளார்.
சிறப்பு சாதனத்தில் உள்ள தடுப்பான்கள் எந்தவொரு கெட்ட நாற்றத்தையும் வீட்டிற்குள் வரவிடாமல் தடுப்பதாகவும் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதன் மூலம் தங்களுக்கு சுத்தமான மற்றும் சத்து மிகுந்த இயற்கை உரமும் கிடைப்பதாக ஜான் குறிப்பிட்டுள்ளார்.