கடும் குளிரால் மூடப்பட்ட பாடசாலை… சகோதரர்கள் இருவருக்கு குடியிருப்பில் நேர்ந்த துயரம்
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் வெள்ளியன்று கடும் குளிர் நிலவியதால், பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில், குடியிருப்பில் தங்கிய இரு சகோதரர்கள் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாகாணம் முழுக்க அதிர்ச்சி
குடியிருப்பில் திடீரென்று ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் தீ மளமளவென பரவியதில், 4 மற்றும் 6 வயதுடைய சகோதாரர்கள் இருவரும் மரணமடைந்துள்ளனர். இச்சம்பவம் மாகாணம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.
சிறுவர்களின் தாயார் மற்றும் தாத்தா பாட்டி ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். வெடிப்பு சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் துரித நடவடிக்கை இருந்தபோதிலும்,
காப்பாற்ற முடியாமல் போனது
தீயின் தீவிரம் காரணமாக மீட்பு முயற்சிகள் தாமதமானதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஜன்னல் வழியாக நுழைந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவர்கள் இருவரையும் தேடியுள்ளனர்.
ஆனால் உரிய நேரத்தில் அவர்களை காப்பாற்ற முடியாமல் போனதாக கூறப்படுகிறது. சிறார்கள் இருவரின் மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 145,000 டொலர் அளவுக்கு பொதுமக்கள் நிதியுதவி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.