வெறும் கைகளால் அக்ரூட் பருப்பை உடைப்பது எப்படி? டயட்டிஷியன் வீடியோ
இது குளிர்காலம், பெரும்பாலான மக்கள் நட்ஸ் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால், முழு அக்ரூட் பருப்புகளை உடைக்கவே உங்களுக்கு நிறைய சக்தி வேண்டும். சுத்தியலைப் பயன்படுத்துவது உட்பட அனைத்து ஹேக்குகளையும் நீங்கள் முயற்சித்திருக்கலாம்,
சுத்தியலைப் பயன்படுத்தாமல் அவற்றை உடைக்க சில உடனடி ஹேக்ஸ் இங்கே உள்ளன.
இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்சர் தீப்தி கபூரின் கூற்றுப்படி, அக்ரூட் பருப்பை தண்ணீரில் சில நிமிடங்கள் வேகவைத்தால் போதும்.
ஹேக்கிற்குள் நுழைவதற்கு முன், வால்நட்ஸ் ஏன் உங்களுக்கு நல்லது என்பதை இங்கே பார்க்கலாம்.
பருப்புகள், குறிப்பாக பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள், இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகின்றன என்று உணவியல் நிபுணர் பயல் சர்மா (senior dietician, Dharamshila Narayana Suprspecialty Hospital) கூறினார்.
அவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன, அவை ரத்த சர்க்கரை அளவு மெதுவாக அதிகரிக்க வழிவகுக்கும் என்பதைக் குறிக்கிறது.
* முழு வால்நட்ஸை தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.