15 நிமிடத்தில் அசத்தல் சமையல் – பட்டர் கார்லிக் மஷ்ரூம் செய்வது எப்படி?

எப்படி செய்யலாம்னு பார்ப்போம்….

தேவையான பொருட்கள்:

1 கப் காளான் – சுமார் 100 கிராம், 1 தேக்கரண்டி வெண்ணெய், 1 தேக்கரண்டி பூண்டு நறுக்கியது, 1 தேக்கரண்டி மிளகு பொடி, 1 தேக்கரண்டி தைம் / கலப்பு மூலிகைகள் (Italian herbs), உப்பு, கொத்தமல்லி

பட்டர் கார்லிக் மஷ்ரூம் செய்முறை:

காளானை நன்கு கழுவி சுத்தம் செய்து, மெல்லியதாக நறுக்கி தனியாக வைக்கவும்.

ஒரு கடாயில் வெண்ணெய் உருகவும், இதனுடன் பூண்டு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் காளான் சேர்க்கவும்.

இதனை ஒரு நிமிடம் வதக்கவும், ஒரு நிமிடம் சமைக்கவும், பின்னர் மீண்டும் வதக்கவும்.

காளனில் இருந்து தண்ணீர் வெளியேறும், எனவே அது உலரும் வரை சமைக்கவும்

பின்னர் மிளகு, இடாலியன் ஹெர்ப்ஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

கடைசியாக கொத்தமல்லி தழை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் அணைக்கவும். இபோது பூண்டு பட்டர் கார்லிக் மஷ்ரூம் தயார்.

குறிப்பு:

காளான்களை அடிக்கடி வதக்கிக் கொண்டிருக்க வேண்டாம். சமமாக சமைக்கும் வகையில் தட்டையான தவாவைப் பயன்படுத்தலா

ம்குறிப்பு:

காளான்களை அடிக்கடி வதக்கிக் கொண்டிருக்க வேண்டாம். சமமாக சமைக்கும் வகையில் தட்டையான தவாவைப் பயன்படுத்தலாம்.

புதிதாக நொறுக்கப்பட்ட மிளகு சேர்க்கவும். காளான்கள் தண்ணீர் விட்ட பின்னரே மற்ற தேவையான பொருட்களை சேர்க்க வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *