சுவிஸ் நாட்டில் தமிழ் பொது நூலகம் உருவாக்கம்
சுவிஸ் நாட்டில் தமிழ் பொது நூலகம் உருவாக்கம், அறிவுக்கு ஒரு வாசல் எனும் திட்டத்தின் அடிப்படையில் சுவிஸ் நாட்டில் நிர்வாகக்கட்டைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக 08.03.24 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மலையகப்பகுதியில் அமைந்துள்ள திம்புல்ல தமிழ் மகா வித்தியாலயப்பாடசாலைக்கு அறுநூறுக்கு மேற்பட்ட நூல்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த முதலாவது செயற்திட்டத்திற்கு 35 பேருக்கு மேற்பட்ட தமிழ் உறவுகள் இணைந்து பங்களிப்புக்களை வழங்கியிருந்தனர்.
அத்தோடு நிர்வாக ஒருங்கிணைப்பாளர் இரா.பிறேம்ராஜ் அவர்கள் செயற்திட்டங்களை முன்னெடுத்தார். அடுத்த கட்டமாகவும் மீண்டும் இந்தப்பணியினை மேற்கொள்ள நிர்வாகத்தினர் முனைப்புக்காட்டியுள்ளனர்.
இது போன்ற சமூகவளர்ச்சித்திடடங்களை விரிவுபடுத்த மக்களும் தயார் நிலையிலுள்ளனர்.
தமிழ் பொது நூலகம் நிர்வாகம் சார்பாக செல்வராஐா வைகுந்தன்.