கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலின் புதிய எஸ்யூவி கார்… விலை எவ்வளவு தெரியுமா..?

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ராகுல். கே.எல்.ராகுல் கிரிக்கெட்டிற்காக மட்டுமின்றி சொகுசு கார்கள் மீதான அவரது ஆர்வம் காரணமாகவும் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதல் ரன் மெஷின் விராட் கோலி வரை, கார் மீது மோகம் கொண்ட பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்

அந்த வகையில் தனது கார் கலெக்ஷனில் கே.எல்.ராகுல் புதிதாக புத்தம் புதிய நியூ ஜென்ரேஷன் லேண்ட் ரோவர் டிஃபென்டர் சொகுசு எஸ்யூவி-யை வாங்கி சேர்த்து உள்ளார். சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வைரலான வீடியோ ஒன்றில் தற்போது அதிகமாக விற்பனையாகும் ஆடம்பர SUV மாடல்களில் ஒன்றான Land Rover Defender-ல் இருந்து வெளியே இறங்குவதை பார்க்க முடிந்தது. இந்த எஸ்யூவி-யின் விலை ரூ.1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். கே.எல்.ராகுல் தனது கார் கேரேஜில் ஏற்கனவே BMW X7 மற்றும் Mercedes-AMG C43 போன்ற பல சொகுசு கார்களை வைத்துள்ளார்.

லேண்ட் ரோவர் நிறுவனம் தனது புதிய தலைமுறை டிஃபென்டர் காரை சில ஆண்டுகளுக்கு முன் பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தியது. அறிமுகமானத்திலிருந்து இந்த புத்தம் புதிய பிரீமியம் SUV காரானது உலகெங்கிலும் உள்ள பல பிரபலங்கள் மற்றும் தொழிலபதிபர்களை கவர்ந்துள்ளது. இந்த புதிய Defender SUV-ஐ ஏற்கனவே இந்திய பிரபலங்களான அமிதாப் பச்சன், கரீனா கபூர், ராம் சரண், சோனம் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், அர்ஜுன் கபூர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் வாங்கி இருக்கிறார்கள். எம்.எஸ்.தோனி கூட Defender SUV-யின் பழைய வெர்ஷனை வைத்திருக்கிறார்.

முந்தைய மாடலை போலவே தற்போது விற்பனையில் இருக்கும் புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டரும் ஷார்ட் வீல்பேஸ் 3-டோர் (SWB) மற்றும் லாங்-வீல்பேஸ் 5-டோர் (LWB)வெர்ஷனில் கிடைக்கிறது. SWB வெர்ஷன் Defender 90 என்றும், LWB வெர்ஷன் Defender 110 என்றும் அழைக்கப்படுகிறது. இதன் 3-லைன் எஸ்யூவி-யின் பெயர் Defender 130 ஆகும். தகவலின்படி, கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 (LWB) மாடலை வாங்கியுள்ளார். இந்த காரின் கவர்ச்சிகரமான வெளிப்புற வடிவமைப்பு இதற்கு ஹை பிரீமியம் லுக்கை கொடுக்கிறது. மேலும் ஆஃப்-ரோடிங்கை விரும்புபவர்களுக்கு இந்த எஸ்யூவி ஒரு நல்ல தேர்வாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *