Crime: 15 ரூபாய் கடனுக்காக ஒருவர் அடித்துக் கொலை; ஆம்பூர் அருகே பயங்கரம்

ம்பூர் அருகே 15 ரூபாய் கடனுக்காக ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர், அதே பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சட்ட விரோதமாக ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து நடமாடும் பெட்டிகடை போல் ஹான்ஸ் போதை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்‌.

இந்நிலையில் அதே பகுதியில் மாற்று சமூகத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்செல்வனிடம் சென்று ஹான்ஸ் வாங்கி கொண்டு அதற்கான பணமான 15 ரூபாயை பின்னர் தருவதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் செல்வத்தின் மகனான சுரேஷ்குமார் மற்றும் அவரது மகனும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள கடைக்கு காய்கறி வாங்குவதற்காக சென்றுள்ளனர்.

அப்பொழுது அங்கு சுரேஷ்குமாருக்கும், தமிழ்செல்வனின் மகனான ஞானசேகருக்கும், இடையே 15 ரூபாய் பணத்திற்காக வாய்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஞானசேகர், சுரேஷ்குமாரை கடுமையாக தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சுரேஷ்குமார் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் சுரேஷ்குமாருக்கு தலையில் அதிக அளவு காயம் ஏற்பட்டிருப்பதிருப்பதாகவும் அதனால் அவரை மேல்சிகிச்சைக்காக மருத்துவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ்குமார் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *