திரண்ட மக்கள் கூட்டம்… மூடப்பட்ட லண்டன் Tower Bridge
பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் லண்டன் Tower Bridge-ல் திரண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதை அடுத்து தற்போது மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் Tower Bridge
பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஸா பகுதியில் போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே லண்டன் மக்களில் சிலர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சனிக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 5.40 மணியளவில் லண்டன் Tower Bridge-ல் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லண்டன் பொலிசார் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் தெரிவிக்கையில்,
ஆர்ப்பாட்டக்காரர்களால் Tower Bridge மூடப்பட்டுள்ளதாகவும், சம்பவயிடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் உள்ளூர் நேரப்படி 6.26 மணிக்கு Tower Bridge மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
சுமார் 45 நிமிடங்கள் Tower Bridge மூடப்பட்டிருந்ததாக பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் எவரும் கைதாகவில்லை என்றும், காயங்கள் ஏற்பட்டதாக தகவல் ஏதும் பதிவாகவில்லை என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.