இந்த பேருக்காவே கூட்டம் கூட்டமா போய் வாங்க போறாங்க… மாருதி, டாடா பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் புதிய கார்!
இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ள சிட்ரோன் (Citroen), கூடிய விரைவில் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt) என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது. இது கூபே எஸ்யூவி (Coupe SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சிட்ரோன் பசால்ட் கார் வரும் மார்ச் 27ம் தேதி (March 27) பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதை தொடர்ந்து வரும் மாதங்களில், விலை (Price) எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இந்த கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வரும் சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் (Citroen C3 Aircross) காரின் அடிப்படையில், சிட்ரோன் பசால்ட் உருவாக்கப்படவுள்ளதாக தெரிகிறது. எனவே சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான் (Turbo Petrol Engine), சிட்ரோன் பசால்ட் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இன்ஜின் சிட்ரோன் சி3 ஏர்க்ராஸ் காரில் மட்டுமல்லாது, சிட்ரோன் சி3 (Citroen C3) காரிலும் கொடுக்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சிட்ரோன் பசால்ட் காரில் இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் அதிகபட்சமாக 109 பிஹெச்பி மற்றும் 205 என்எம் டார்க் ஆக இருக்கலாம். இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம்.
வசதிகளை (Features) பொறுத்தவரையில் சிட்ரோன் பசால்ட் கூபே எஸ்யூவி காரில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம். டிசைனை (Design) பொறுத்தவரையில், சதுர வடிவ டெயில்லேம்ப்கள், ஸ்பிளிட் ஹெட்லேம்ப்கள், சுறா துடுப்பு ஆன்டெனா, 17 இன்ச் அலாய் வீல்கள் போன்றவை இடம்பெறலாம்.