வெளிநாட்டில் இந்திய மாணவருக்கு ஏற்பட்ட கொடூரம்… நால்வர் குழுவால் பயங்கரம்

ஐதராபாத் பகுதி மாணவர் ஒருவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில், குடியிருப்பின் அருகாமையிலேயே நால்வர் குழுவால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய வம்சாவளி மாணவர்கள் நால்வர்
தமது நிலை குறித்து காணொளி ஒன்றில் கோரிக்கை வைத்த அந்த மாணவர், கொடூரமாக தாக்கப்பட்டதையும் அலைபேசியை பறித்திக்கொண்டு அந்த குழு மாயமானதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டு பிறந்து ஒரே மாதத்தில் இந்திய வம்சாவளி மாணவர்கள் நால்வர் அமெரிக்காவில் இதுவரை கொல்லப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்திய மாணவர் ஒருவர் நால்வர் குழுவால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் நகரை சேர்ந்த Syed Mazahir Ali என்பவர் அமெரிக்காவில் Indiana Wesleyan பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், அவரது குடியிருப்பின் அருகாமையில் செவ்வாய்க்கிழமை அவர் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலை, மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் சொட்ட, Syed Mazahir Ali தெரிவிக்கையில், உணவு பொட்டலத்துடன் குடியிருப்புக்கு திரும்பும் நிலையில், நால்வர் குழு ஒன்று தம்மை எதிர்கொண்டு, தாக்கியதாகவும்,

நால்வர் குழு ஒன்று
உயிர் பயத்தில் ஓட்டமெடுத்த தம்மை துரத்தி துரத்தி தாக்கியதாகவும், அதன் பின்னர் தம்மிடம் இருந்த அலைபேசியை பறித்துக் கொண்டு அந்த குழு மாயமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் Ohio பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் 19 வயதேயான Shreyas Reddy Beniger என்ற மாணவர் சடலமாக மீட்கப்பட்டார். அந்த மாணவரும் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர். முதற்கட்ட விசாரணையில் மாணவர் Shreyas Reddy Beniger கொலையில் சந்தேகம் இருப்பதாக கருதவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

அந்த வார தொடக்கத்தில், Purdue பல்கலைக்கழக மாணவர் நீல் ஆச்சார்யா சடலமாக மீட்கப்பட்டார். தமது மகன் மாயமானதாக அவரது தாயார் புகார் அளித்த சில மணி நேரங்களில் பல்கலைக்கழக வளாகத்திலேயே நீல் ஆச்சார்யா உடல் மீட்கப்பட்டது.

ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி, ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியாவில் கடந்த ஜனவரி 16ம் திகதி வீடற்ற ஒருவரால் சுத்தியலால் தாக்கிக் கொல்லப்பட்டார். அந்த நபருக்கு விவேக் சைனி அவ்வப்போது உணவும் தண்ணீரும் அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் சம்பவம் நடந்த 16ம் திகதி விவேக் சைனி அந்த நபருக்கு இலவசமாக உணவு தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் சுத்தியலால் 50 முறை விவேக் சைனியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *