மொறுமொறு தேன்குழல் மிட்டாய்: வாயில் கரையும் ஸ்வீட் ரெசிபி
ஒரு முறை இப்படி தேன்குழல் மிட்டாய் செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
3 கப் பச்சரி மாவு அரைத்தது
கால் கப் உளுந்து மாவு
புளித்த இட்லி மாவு – 2 கப்
தேவையான அளவு தண்ணீர்
தேங்காய் ஓடு சுத்தம் செய்தது
பொறிக்கும் அளவு எண்ணெய்
1 ½ கப் சர்க்கரை
1 கப் தண்ணீர்
3 ஏலக்காய் இடித்தது
செய்முறை : ஒரு பாத்திரத்தில், பச்சரிசி மாவு, உளுந்தம் மாவு சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் புளித்த இட்லி மாவுடன் தண்ணீர் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் செர்த்து அரை கம்பி பதம் வரும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து ஒரு சிரட்டையை சுத்தம் செய்து. ஒரு கண்ணில் மட்டும் துளையிட வேண்டும். இதில் மாவு நிறைத்து, எண்ணெய்யில் தேன்குழல் மிட்டாய் வடிவில் பொறித்து எடுக்கவும். தொடர்ந்து இதை சீனி பாகில் சேர்க்கவும்.