கதறி அழும் ஊழியர்கள்.. 2 நிமிட மீட்டிங், 200 பேர் பணிநீக்கம்..!
ஒரு ஊழியரின் வாழக்கையைப் புரட்டிப்போடும் ஒரு அறிவிப்புப் பணிநீக்கம். அத்தகைய பணிநீக்க அறிவிப்பு வெறும் 2 நிமிட காலில் 200 ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டால் எப்படியிருக்கும்.
இத்தகையைச் சம்பவம் தான் Frontdesk என்னும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் நடந்துள்ளது. எவ்விதமான முன் அறிவிப்புமின்றி, ஊழியர்களை அவசர கூட்டத்திற்கு அழைத்து 2 நிமிடத்தில் 200 பேரை பணிநீக்கம் செய்துள்ளார் ஜெசி டிபின்டோ என்ற Frontdesk நிறுவன சிஇஓ. இந்த அறிவிப்பால் 200 பேரின் வாழ்க்கை தற்போது பெரும் கேள்வி குறியாகியுள்ளது. அதிக வட்டி, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றுக்கு மத்தியில் சரியான நிதி ஆதாரம் இல்லாத, லாபம் பெற முடியாத, போட்டிப்போட முடியாத நிறுவனங்கள் திவாலாகி விடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் நிறுவன செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஊழியர்களைக் கொத்துக் கொத்தாகப் பணிநீக்கம் செய்து வருகிறது. 2022 ஜூன் மாதத்திற்குப் பின்பு இன்று வரையில் பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் நிறுவனங்கள் மத்தியில் தொடர்ந்து வெளியாகும் வேளையில், ஒரு சில நிறுவனங்கள் பிரச்சனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மிகவும் மோசமான முறையில் ஊழியர்களை வெளியேற்றி வருகிறது. உதாரணமாகக் கூகிள் சிஇஓ சுந்தர் பிச்சை 10000க்கும் மேற்பட்ட ஊழியர்களை எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பொது வெளியில் பணிநீக்கம் செய்ய முறை தவறானது என ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தார். தற்போது இதேபோல் போன்ற சம்பவம் தான் நடந்துள்ளது, Frontdesk என்ற சொத்து மேலாண்மை டெக் சேவை நிறுவனம் வெறும் 2 நிமிட கூகுள் மீட் சந்திப்பில் சுமார் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார் இந்நிறுவனத்தின் சிஇஓ ஜெசி டிபின்டோ. ஸ்டார்ட்அப் துறையைக் கவனித்தவர்களுக்கும் Funding Winter குறித்துக் கட்டாயம் தெரிந்திருக்கும், ஸ்டாட்அப் நிறுவனங்கள் புதிதாக முதலீட்டைப் பெற முடியாமல் மாட்டிக்கொண்டு இருப்பது இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இதே நிலைமை தான்.
இதன் வாயிலாகத் தற்போது நிறுவனத்தில் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார். Frontdesk நிறுவனம் முதலீட்டைத் திரட்ட முடியாமல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதை இந்தக் கூகுள் மீட் கூட்டத்தில் பங்குபெற்ற சில ஊழியர்களும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளனர்.