சிஎஸ்கேக்கு இந்த 5 பேர் கிட்ட இருந்து தான் ஆபத்து இருக்கு..ஆர்சிபி அணியில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்
ஐபிஎல் 17வது சீசனில் முதல் லீக் ஆட்டம் வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி, பலம் வாய்ந்த ஆர்சிபிஐ எதிர்கொள்கிறது.
ஆர்சிபி அணி கடந்த 2008 ஆம் ஆண்டு தான் சென்னைக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற 16 ஆண்டுகளில் சிஎஸ்கே அணியை சேப்பாக்கத்தில் ஆர்சிபி வீழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் ஆர் சி பி அணியும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது.
ஆர் சி பி அணியில் இருக்கும் ஐந்து வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு நிச்சயம் தலைவலியாக இருப்பார்கள். அவர்கள் யார்? சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணிக்கு இருக்கும் பெரிய தலைவலியே ஆர் சி பி அணியின் கேப்டன் டுபிளசிஸ் தான். ஏனென்றால் அவர் சிஎஸ்கே அணியில் தான் தன்னுடைய பெரும்பாலான போட்டிகளை விளையாடியிருக்கிறார்.
இதனால் சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி செயல்படும். இங்கு எவ்வாறு விளையாட வேண்டும் என்ற யுக்திகள் டுப்ளிசிஸ்க்கு நன்கு தெரியும். இதனை அடுத்து சிஎஸ்கேவுக்கு இருக்கும் பெரிய பிரச்சினையை விராட் கோலி தான் விராட் கோலி சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் ஆங்கர் ரோல் செய்து பின்னர் ரன்களை அடிக்கக்கூடிய வல்லவர்.
மேலும் சிஎஸ்கே பவுலிங் சிக்ஸர்களுக்கு விரட்டுவதில் மேக்ஸ்வெல் வல்லவர். இந்திய ஆடுகளத்தில் அவர் செய்த சம்பவங்கள் இன்னும் யாராலும் மறக்க முடியாதது. பேட்டிங்கில் இந்த மூன்று பேர்களின் விக்கெட்டுகளையும் சிஎஸ்கே விரைவில் வீழ்த்த வேண்டும். இதேபோன்று ஆர் சி பி அணியின் மற்றொரு புதிய வீரரான கேமரன் க்ரீன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இரண்டிலுமே சிறப்பாக விளையாடக் கூடியவர்.
கேமரா கிரீனில் வருகை rcb அணியின் பலத்தை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. இதனால் கேமரான் கிரீன் சிஎஸ்கேவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் முகமது சிராஜ். தன்னுடைய புத்தி கூர்மையான வேகப்பந்து வீச்சால் சிஎஸ்கே வீரர்களை தடுமாற வைப்பார். இந்த ஐந்து வீரர்களுமே சிஎஸ்கேவுக்கு பிரச்சனையாக இருந்தாலும் யாஷ் தயால், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் சிஎஸ்கே அணிக்கு பிரச்சனைகளை கொடுக்கலாம்.