சிஎஸ்கே வீரர் மொயின் அலி ஹாட்ரிக் சாதனை.. பேட்டிங்கில் அதிரடி அரைசதம்.. வீடியோ

ஐபிஎல் 17வது சீசன் நெருங்கி வரும் நிலையில் தற்போது சிஎஸ்கே வீரர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக பார்ம்க்கு திரும்பி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. சிஎஸ்கே அணியின் மிகவும் முக்கியமான வீரர் என்றால் அது மொயின் அலி தான்.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாடி வருகிறார். ரெய்னா இடத்தில் களமிறங்கி அந்தத் தொடரில் 15 போட்டிகளில் 357 ரன்களும் ஆறு விக்கெட்டுகளும் சிஎஸ்கேக்காக மொயின் அலி எடுத்து இருந்தார். இதேபோன்று 2022 ஆம் ஆண்டு 10 போட்டிகளில் விளையாடி 244 ரன்கள் பந்துவீச்சில் எட்டு விக்கெட்களையும் மொயின் கைப்பற்றி இருந்தார்.

எனினும் 2023 ஆம் ஆண்டு மொயின் அலி 15 போட்டிகளில் விளையாடி 124 ரன்கள் அடித்திருந்தார். அந்தத் தொடரில் அவர் வெறும் 91 பந்துகளை தான் எதிர் கொண்டு இருந்தார். இதை போன்று பந்துவீச்சில் மொயின் அலி ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவருடைய இடத்திற்கு ரச்சின் ரவீந்திராவை, சிஎஸ்கே அணி நிர்வாகம் தேர்வு செய்தது.

எனினும் மொயின் அலி, சிஎஸ்கே அணியில் நீடித்தாலும் அவர் கடந்த சில மாதங்களாக சரியாக விளையாடவில்லை என்ற கவலையும் ரசிகர்களுக்கு இருந்தது. இதனால் மொயின் அலி, இந்த தொடரில் பிளேயிங் லெவனில் திரும்புவது கடினம் தான் என்று நினைக்கப்பட்டது. ஆனால் தற்போது சரியான நேரத்தில் மோயின் அலி ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். வங்கதேசத்தில் நடைபெற்று வரும் bpl தொடரில் மொயின் அலி காமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இன்றைய ஆட்டத்தில் சாட்டோ கிராம் சேலஞ்சர்ஸ் அணியை மோயின் அலி எதிர்கொண்டார். வெற்றிக்கு 240 ரன்கள் தேவை என எதிர்கொண்டிருந்த போது சாட்டோகிராம் அணியினர் தடுமாறி வந்தனர். அப்போது ஆட்டத்தின் 17 வது ஓவரை வீசிய அடுத்தடுத்து முதல் மூன்று பந்துகளில் சாட்டோ கிராம் வீரர்கள் ஷாஹிதுல் இஸ்லாம், அல்அமீன் உசைன், மற்றும் பிலால் கான் ஆகியோர் விக்கெட்டுகளை மொயின் அலி கைப்பற்றினார்.

இதன் மூலம் மொயின் அலி, ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்தார். இந்த போட்டியில் மொயின் அலி 3.3 ஓவர்கள் வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோன்று முன்னதாக மொயின் அலி பட்டையை கிளப்பினார். 24 பந்துகளை எதிர்கொண்ட அவர் 53 ரன்கள் குவித்துள்ளார்.

இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ் எ 20 தொடரில் ஜே எஸ் கே அணிக்காக விளையாடிய மொயின் அலி, 11 போட்டிகளில் விளையாடி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோன்று பேட்டிங்கிலும் 169 ரன்கள் அடித்து இருந்தார். மொயின் அலியின் இந்த செயல்பாடு சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் நம்பர் மூன்றாவது இடத்தில் மொயின் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *