CSK vs RCB: ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு உறுதி! இந்த 2 வீரர்களுக்கு சந்தேகம் தான்!
2024 இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் வரும் மார்ச் 22ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 5 முறை பட்டத்தை வென்று அனைவருக்கும் சவால் விடும் அணியாக உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து ஐந்தாவது பட்டத்தை வென்றது எம்எஸ் தோனி தலைமையிலான சென்னைல் சூப்பர் கிங்ஸ் அணி. இந்த ஆண்டு நடைபெற பெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டது. ஷர்துல் தாக்கூரை மீண்டும் தங்கள் அணியில் 4 கோடி ரூபாய்க்கு எடுத்தனர். மேலும் நியூசிலாந்து நட்சத்திர வீரர்களான டேரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரரையும் ஒப்பந்தம் செய்தனர்.
மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமீர் ரிஸ்வி என்னும் இளம் வீரரை 8.40 கோடிக்கு ஏலத்தில் சென்னை எடுத்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. தோனிக்கு ஐபிஎல் 2024 சீசன் கடைசியாக இருக்கலாம் என்றும், இந்த ஆண்டு ஆறாவது ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று ஓய்வை அறிவிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மார்ச் 22ஆம் தேதி ஆர்சிபிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேயின் பிளேயிங் லெவன் அணி எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. காரணம் சென்னை அணி தொடரின் முதல் போட்டியில் களமிறக்கும் அணியை தான் கடைசி வரை கொண்டு செல்லும்.
ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு சென்னை அணியின் இரண்டு முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் டெவோன் கான்வே போட்டியின் முதல் பாதியில் விளையாடமாட்டார் என்றும், அதே போல வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனவும் காயத்துடன் போராடி வருவதால் அவரும் பங்கேற்பது சந்தேகம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. கான்வே இல்லாத பட்சத்தில் அஜிங்க்யா ரஹானே ருதுராஜ் கெய்க்வாடுடன் களமிறங்க வாய்ப்புள்ளது. ஐபிஎல் 2023 சீசனில் 172 ஸ்டிரைக் ரேட்டில் 326 ரன்கள் அடித்து சிறப்பாக ஆடி இருந்தார் ரஹானே. ரச்சின் ரவீந்திர ஒருநாள் உலகக் கோப்பையில் 3-வது இடத்தில் பேட்டிங் செய்து சிறப்பாக செயல்பட்டார்.
மேலும் அவர் ஐபிஎல் 2024-ல் 3வது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது. அவரை தொடர்ந்து சிவம் துபே 4வது இடத்தில் பேட்டிங் செய்ய உள்ளார். பின்பு 4வது இடத்தில் நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் களமிறங்க வாய்ப்புள்ளது. அந்த இடத்தில் எப்போதும் மொயீன் அலி களமிறங்கி வருகிறார். இந்த முறை தோனி யாருக்கு வாய்ப்பு கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, ஷத்ருல் தாக்கூர், தீபக் சாஹர், தீக்சனா மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் அணியில் இடம் பெறலாம். தற்போதைய சிஎஸ்கே அணியில் எக்கசக்க ஆல் ரவுண்டர்கள் உள்ளதால் சென்னை அணியின் பேட்டிங் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்சிபிக்கு எதிரான சிஎஸ்கே விளையாடும் லெவன்: அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, எம்எஸ் தோனி (வி.கே.), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், தீக்சனா, முஸ்தபிசுர் ரஹ்மான்.
சிஎஸ்கே அணி 2024: எம்எஸ் தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, எம். , சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ் ஆரவெல்லி.