Cucumber Benefits: உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்
நீர்ச்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காய், உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கான அற்புதமான காய்கறியாகும்.
வெள்ளரிக்காயில் விட்டமின்கள், தாதுக்கள், உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், குறைந்த கலோரி போன்ற அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
விட்டமின் கே எனும் உயிர்ச்சத்து வெள்ளரிக்காயில் அதிகம், நீர்ச்சத்து அதிகம் என்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
விட்டமின் சி மற்றும் இதில் நிறைந்துள்ள பிற ஊட்டச்சத்துக்கள் உடல் வலியை போக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதனால் உங்கள் சருமம் பளபளவென மின்னும், சிலிகா எனும் கனிமம் நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்க துணைபுரிகிறது.
வாயில் உள்ள பக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வெள்ளரிக்காய்க்கு உண்டு, சிறிய துண்டு வெள்ளரிக்காயை 30 நொடிகள் வரை வாயில் வைத்துவிட்டு எடுத்துவிடுங்கள், இது வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர்நாற்றத்தை போக்கிவிடும்.
கருப்பை, புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கிறது, இதனை கேரட்-வுடன் சேர்த்து சாப்பிடும் போது கீல்வாதத்திற்கு நிவாரணம் அளிக்கிறது.
இதிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த கொதிப்பை சரிசெய்கிறது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து எடையை குறைக்க உதவும்.
கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் வெள்ளரிக்காயில் இருப்பதால் அடிக்கடி சாப்பிடுவது வருவது நல்லது.
சாறாகவோ, சாலட்டிலோ அல்லது அப்படியே கூட வெள்ளரிக்காயை சாப்பிடலாம், கோடை காலத்திற்கு ஏற்றதும் இதுவே.
எடையை குறைக்க
ஒரு போத்தல் தண்ணீரில் வெள்ளரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போடவும், இதில் புதினா சிறிதளவு, எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சிறிதளவு சேர்க்கவும்.
இதை அப்படியே இரவு முழுவதும் வைத்து விட்டு காலையில் பருகலாம், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை இந்த தண்ணீருக்கு உண்டு.
வளர்சிதை மாற்றத்தை தூண்டி எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.