|

ஆசிரமத்தில் மன்மத லீலை! பலாத்கார வழக்கில் ‘குட்டி புத்தர்’ அதிரடி கைது! யார் இந்த ராம் பஹதூர்

15 வயது சிறுமி, 18 வயது கன்னியாஸ்திரியை ஆசிரமத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நேபாளத்தின்’குட்டி புத்தர்’ என அழைக்கப்படும் ராம் பஹதூர் போம்ஜானை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் அவரை போலீசார் தட்டித்தூக்கி உள்ளனர்.

நேபாளத்தை சேர்ந்தவர் ராம் பஹதூர் போம்ஜான். இவருக்கு வயது 33. புத்தரின் மறுஅவதாரம் என அவரை மக்கள் அழைக்கின்றனர். குட்டி புத்தர் என பெயர் பெற்ற இவருக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் உள்ளனர்.

இவர் பல மாதங்களாக தண்ணீர், உணவு இன்றி மரத்தின் அடியில் தியானம் செய்து மக்கள் மத்தியில் புகழ்பெற்றார். 2005 காலக்கட்டத்தில் இவர் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றார். இதையடுத்து தான் அவருக்கான பக்தர்கள் என்பது அதிகரிக்க தொடங்கியது.

நேபாளத்தில் ராம் பஹதூர் போம்ஜான் ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு அவரது பக்தர்கள் வந்து ஆசீ வாங்கி செல்கின்றனர். மேலும் ஆசீரமத்தில் அவரிடம் சீடராகவும், சிஷ்யையாகவும் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் ராம் பஹதூர் போம்ஜான் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர் தனது பெண் சிஷ்யை மற்றும் பக்தர்களுக்கு ஆசிரமத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார்கள் கிளம்பின.

குறிப்பாக 15 வயது சிறுமியை அவர் பலாத்காரம் செய்ததாக கிளம்பிய புகார் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியது. கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் அவருக்கு எதிராக 10க்கும் அதிகமான புகார்கள் கிளம்பின. இதுதொடர்பாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ராம் பஹதூர் போம்ஜான் தலைமைறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2018 ம் ஆண்டில் 18 வயது கன்னியாஸ்திரி ஒருவர் அவர் மீது பலாத்கார புகார் செய்தார். ஆசிரமத்தில் வைத்து தன்னை பலாத்காரம் செய்தாக அவர் ராம் பஹதுர் போம்ஜான் மீது புகாரளித்தார். மேலும் அவரது ஆசிரமத்தில் இருந்து 2 ஆண், 2 பெண்கள் என மொத்தம் 4 பக்தர்கள் மாயமானதாகவும் புகார் எழுந்தது. இதுவும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் பற்றி இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தான் காத்மாண்ட் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர் பதுங்கி இருப்பது பற்றி நேபாள காவல்துறையின் மத்திய புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்த அவர் பதுங்கியிருந்த வீட்டு ஜன்னலில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கட்டுக்கட்டாக நோபாள நாட்டின் பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *