வாடிக்கையாளர்கள் ஷாக் கொடுத்த ஏர்டெல், ஜியோ! விரைவில் கட்டணம் உயர்கிறது ..!

ந்தியாவில் 5ஜி நெட்வொர்க் வேகமாக விரிவடைந்து வருகிறது. நாட்டின் 2 மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் இதை வெளியிடுகின்றன.

கிட்டத்தட்ட அனைத்து பெரிய நகரங்களிலும் பயனர்கள் 5G வேகத்தின் பலனைப் பெறத் தொடங்கியுள்ளனர். விரைவில் அதன் கவரேஜ் இந்தியா முழுவதும் கிடைக்கும். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டும் தங்கள் பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவை இலவசமாக வழங்குகின்றன.

நாடு முழுவதும் தற்போது 5ஜி சேவை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் ஏண்ணிக்கை 125 மில்லியனாக உள்ளது. நடப்பு ஆண்டு இறுதிக்குள் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் 5 ஜி சேவையை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் தற்போது வருவாயை பெருக்கும் விதமாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி அன்லிமிட்டடு சேவையையும் திரும்ப பெறுவதோடு 4ஜி கட்டணத்தை விட கூடுதலாக 5 முதல் 10 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டின் அரையாண்டுக்கு பிறகு அதாவது இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு இந்த கட்டண உயர்வு இருக்கும் என்று தெரிகிறது. இதுபோக மொபைல் சேவை கட்டணத்தையும் செல்போன் நிறுவனங்கள் 20 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் வரும் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இந்த கட்டணம் உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *