Cylinder Price: புத்தாண்டில் ஒரு ஸ்வீட் நியூஸ்; சிலிண்டர் விலை குறைப்பு; எவ்வளவு தெரியுமா?
வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாகவே இந்த திடீர் விலை குறைப்பு என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையிலும் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலை ₹ 918.50 . இவை ஒவ்வொரு மாதமும் இந்திய அரசால் நிர்ணயம் செய்யப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்துக்கொள்ள முடியும். ஆனால் பெட்ரோல் டீசல் விலை கடந்த 20 மாதங்களுக்கு மேலாக எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகின்றது.
அதேபோல், சமையலுக்கு விற்பனை செய்யப்படும் சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் நாள் அல்லது 16ம் தேதி அன்று மாற்றி அமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் ஜனவரி மாதத்தின் முதல் நாளான இன்று வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 4.50 கு
பட்டுள்ளது