Daily Rasi Palan | இன்றைய ராசிபலன், 04 மார்ச் 2024

மேஷம்:

மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுவது பல பிரச்சனைகளை தவிர்க்க உதவும். உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நடந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம். பெரியோர்களிடமிருந்து அறிவுரை கேட்டு அதன்படி செயல்படுவது மிகவும் நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பண வரவு செலவில் அதிக கவனம் தேவை. சுய முன்னேற்றத்தில் அக்கறை தேவை. உங்களது அதிர்ஷ்டமான நிறம் மேஜெண்டா. அதிர்ஷ்டமான எண் 65. படகை காண்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

ரிஷபம்:

காதல் கை கூடும். அமைதியாக வாழ்க்கையை நடத்த அதிக விருப்பம் கொள்வீர்கள். விதியை நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள். தொழில் ரீதியாகவும் அலுவலக ரீதியாகவும் மிகப் பெரிய உயரத்தை அடைவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் அதிர்ஷ்டமான நிறம் ஊதா. அதிர்ஷ்டமான எண் 5..

மிதுனம்:

இத்தனை நாட்காளாக நீங்கள் எதிர்பார்த்த அன்பை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளுக்கு உங்களை தயாராக வைத்துக் கொள்வது நல்லது. காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழில் மற்றும் அலுவலகத்தை பொருத்தவரை அனைவருக்கும் முன் மாதிரியாக திகழ்வீர்கள். புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்கால திட்டங்களை மனதில் வைத்து செயலாற்ற வேண்டும். பண வரவு செலவில் அதிக அக்கறை தேவை. உங்கள் சுய முன்னேற்றத்தில் அதிக அக்கறை தேவை. உங்கள் அதிர்ஷ்டமான நிறம் பிங்க். அதிர்ஷ்டமான எண் 6. பழுப்பு நிற பையை காண்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

கடகம்:

திருமணமான தம்பதிகளிடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். வரன் தேடுபவர்களுக்கு திருமணம் கைகூடும். காதல் முறிவு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் காதல் கைகூட வாய்ப்புகள் உண்டு. உங்கள் உள்ளுணர்வை கேட்டு செயல்படுவது வாழ்வில் வெற்றியை கொடுக்கும். உங்களை மெருகேற்றிக் கொள்ள உங்களுக்கென்று தனியாக நேரம் செலவிடுவது மிகவும் அவசியமாகும். உடல் நலனில் அதிக அக்கறை தேவை. உங்கள் அதிர்ஷ்டமான நிறம் பவுடர் ப்ளூ. உங்கள் அதிர்ஷ்டமான எண் 16. பீங்கான் குவளையை காண்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

சிம்மம்:

காதலர்களிடையே நெருக்கம் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் உள்ளுணர்வை கேட்டு செயல்பட வேண்டும். நிதி நிலைமையில் அதிக கவனம் தேவை. பணம் வரவு செலவை சரியாக கையாள வேண்டும். வரவுக்கு மேலே செலவை செய்யக்கூடாது. சுய முன்னேற்றத்தில் அதிக அக்கறை தேவை. உங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கு ஏற்ப திட்டங்கள் வகுக்க வேண்டும் உங்கள் அதிர்ஷ்டமான நிறம் நிலக்கரி சாம்பல். அதிர்ஷ்டமான எண் 12. என்ஜினை காண்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

கன்னி:

கன்னி ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் முக்கியமான காலகட்டமாக விளங்கும் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த அத்தனையும் வெற்றிகரமாக நடந்து முடியும் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசி புரிய வைக்கும் முயற்சி செய்ய வேண்டும் தொழிலில் அதிகாரி தேவை அவசரபதியில் முடிவுகளை எடுக்க வேண்டாம் பணவரவு அதிகரிக்கும் நிதி நிலைமை உருவாக இருக்கும் உங்கள் அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் அதிர்ஷ்டமான எண் 11 வெள்ளை ரோஸ் காண்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

துலாம்:

உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வரன் தேடுபவர்களுக்கு திருமணம் கைகூடும். புதிய பாதைகள் திறக்கும். மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். உங்கள் திறமையின் மீது அதிக நம்பிக்கை கொண்டு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். உடல் இயக்கத்தை அதிகரிக்கும் வகையில் உடற்பயிற்சி நடனம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். உங்கள் அதிர்ஷ்டமான நிறம் பியஜ். அதிர்ஷ்டமான எண் 10. மைல் கல்லை பார்ப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

விருச்சிகம்:

வாழ்வில் சில ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். தைரியமாக அவற்றை எதிர்கொள்ள வேண்டும். தடைகளை பற்றி கவலை கொள்ளாமல் விடாமுயற்சியுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டும். உங்கள் அதிர்ஷ்டமான நிறம் காவி. அதிர்ஷ்டமான எண் 25. சிட்டுக்குருவியை பார்ப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

தனுசு:

தனுசு ராசி நேயர்களுக்கு மிகவும் மங்களகரமான காலகட்டமாக இருக்கும். நேர்மையான நிகழ்வுகள் நடந்திடும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வேலையில் புதிய ஒரு உயரத்தை தொடுவீர்கள். உங்களை சுற்றி நேர்மறையான அதிர்வுகள் இருந்து கொண்டே இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். உணர்ச்சியை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்படுவது சில பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம் . பயணங்களை மேற்கொள்ளலாம் உங்கள் அதிர்ஷ்டமான நேரம் பிங்க். அக்குவாரியத்தை காண்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இது மாற்றங்களுக்கான காலகட்டமாக இருக்கும். அதே சமயத்தில் வார்த்தையில் அதிக கவனம் தேவை. தொழில் மற்றும் வேலையை பொறுத்தவரை மிகவும் சிறப்பான காலகட்டமாக இருக்கும். பண வரவு செலவில் கவனம் தேவை. உடல் நலனில் அதிக அக்கறை தேவை. சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் அதிர்ஷ்டமான நிறம் நீலம். அதிர்ஷ்டமான எண் 8. பித்தளை பாத்திரத்தை காண்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு தங்கள் வார்த்தையில் அதிக கவனம் தேவை. மற்றவர்களுடன் உள்ள உறவு மேம்படும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் பெரியோர்களிடம் அறிவுரை கேட்பது மிகவும் நல்லது. தொழில் ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு பணி மாறுதல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுய முன்னேற்றத்தில் அதிக அக்கறை தேவை. உங்கள் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்ய நேரம் ஒதுக்க வேண்டும். உங்கள அதிர்ஷ்டமான நிறம் சில்வர். அதிர்ஷ்டமான எண் 4. விளக்கை காண்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்கள் மீது உணர்ச்சி வசப்படுவதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. தொழிலில் சில தடைகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே சரியாகிவிடும். மன உறுதியுடன் இருப்பது மிகவும் அவசியமாகும். சீரான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம் ஆகும். எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்ளாமல் நிகழ்காலத்தில் மனதை செலுத்தி முழுமையாக அனுபவிக்க வேண்டும். உங்கள அதிர்ஷ்டமான நிறம் கோல்ட். அதிர்ஷ்டமான எண் 50. நகை பெட்டியை பார்ப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *