Daily Rasi Palan | இன்றைய ராசிபலன், 19 பிப்ரவரி 2024
மேஷம் :
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு பிறர் மீது ஈர்ப்பும், ரொமான்ஸ்சும் அதிகமாகும். ஏற்கனவே இருக்கக்கூடிய உறவுகள் வலுவாகும். தனியாக இருப்பவர்கள் புதிய உறவுகளை தேடிக்கொள்வார்கள். நண்பர்களுடன் நேர்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் உள்ளுணர்வு சொல்வதை பின்பற்றுங்கள். பொருளாதாரத்தில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படலாம். சுய பராமரிப்பிற்கு முன்னுரிமை வழங்கும் பொழுது இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 1, அதிர்ஷ்ட நிறம் சில்வர், அதிர்ஷ்ட கல் சிவப்பு கோரல்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை நிலையானதாகவும், பிறரை சார்ந்ததாகவும் இருக்கும். உறவுகளுக்கு இடையே ஆழ்ந்த நெருக்கம் உண்டாகும். நேர்மைக்கும், தன்னம்பிக்கைக்கும் முக்கியத்துவம் வழங்குங்கள். நீடித்து நிலைக்கக்கூடிய உறவுகளுக்கான அடித்தளத்தை அமைப்பீர்கள். இன்றைய நாளை ஓய்வுக்கும், சுய பராமரிப்பு செயல்பாடுகளுக்கும் செலவிடுங்கள். சமச்சீரான வாழ்க்கை முறையை பின்பற்றும் பொழுது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 5, அதிர்ஷ்ட நிறம் மெரூன், அதிர்ஷ்ட அடையாளம் கிரிஸ்டல் ஜார்.
மிதுனம் :
பிறரிடம் நேர்மையாக மனதில் பட்டதை எடுத்துக் கூறி விடுங்கள். உங்களுடைய உணர்வுகளுக்கு நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். எப்பொழுதும் பிறரை சார்ந்து இருப்பதை தவிர்ப்பதற்கு நீங்கள் அதிக முயற்சியை எடுக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். இன்றைய நாள் மனத்தெளிவை தேடும் ஒரு நாளாக அமையும். டைரி எழுதுவது, தியானம் உட்பட உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் நலனுக்கு நல்லது. உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 6, அதிர்ஷ்ட நிறம் மெஜந்தா, அதிர்ஷ்ட அடையாளம் பிளாட்டினம் பேண்ட்.
கடகம் :
கூட்டாளிகள் உடனான உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள் . பண விஷயத்தில் விவேகமாகவும், புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுக்க வேண்டும். உங்களின் இயற்கையான திறன்களை பயன்படுத்தி வேலையில் இன்று வெற்றி காண்பீர்கள். சுய பராமரிப்பு மற்றும் மன நலனில் கவனம் செலுத்துவது நல்லது. போதுமான அளவு ஓய்வு எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 66, அதிர்ஷ்ட நிறம் ஹனி பிரவுன், அதிர்ஷ்ட அடையாளம் சாண்ட் ஸ்டோன்.
சிம்மம் :
உங்களுடைய காதல் வாழ்க்கை மிகவும் ஆர்வமூட்டும் ஒன்றாக அமையும். எதிர்பாராத ஆச்சரியங்களை இன்று பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தலைமைத்துவ திறன்கள் வேலையில் வெற்றி பெறுவதற்கு உங்களுக்கு உதவும். முதலில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 26, அதிர்ஷ்ட நிறம் ஊதா, அதிர்ஷ்ட அடையாளம் கண்ணாடி.
கன்னி:
உங்களுடைய காதல் வாழ்க்கை எதார்த்தத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாக இருக்கும். எதையும் நேர்பட பேசுவது பரிந்துரைக்கப்படுகிறது. நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பொருளாதார நிலைப்பாட்டை அனுபவிப்பீர்கள். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சிறு சிறு தகவல்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுப்பதும், அயராது பாடுபடுவதும் வேலையில் வெற்றி பெறுவதற்கு உங்களுக்கு உதவும். உங்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை இன்று நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 44, அதிர்ஷ்ட நிறம் நீலம், அதிர்ஷ்ட அடையாளம் வெள்ளி காசு.
துலாம்:
உங்களுடைய காதல் வாழ்க்கை சமநிலையானதாக இருக்கும். உறவுகளை வலுவாக வைப்பதற்கு விட்டுக் கொடுப்பது அவசியம். நண்பர்களிடத்தில் நேர்மை குணத்திற்கு அதிக மதிப்பு கொடுங்கள். உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடக்கவும். நிலையான வருமானம் பெறுவீர்கள், நேர்மறையான வளர்ச்சி காணப்படும். மன அமைதியை தரக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமாக உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வு மேம்படும். உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 8, அதிர்ஷ்ட நிறம் கோரல் பிங்க், அதிர்ஷ்ட அடையாளம் வைர மோதிரம்.
விருச்சிகம் :
இன்று காதல் வாழ்க்கையில் இரு வேறு அனுபவங்களை பெறுவீர்கள். நண்பர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். பொருளாதாரத்தில் நிறைய மாற்றங்கள் மற்றும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களை புரிந்து கொள்வதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பலன் அளிக்கும். உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 21, அதிர்ஷ்ட நிறம் பீச், அதிர்ஷ்ட அடையாளம் கையால் எழுதிய குறிப்பு.
தனுசு:
காதல் வாழ்க்கையில் விறுவிறுப்பான அனுபவங்கள் கிடைக்கும். உற்சாகமாக செயல்படுவது உறவுகளை வளர்க்க உதவும். நண்பர்களுடன் நேர்மையான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடப்பது நல்ல நட்பை வளர்ப்பதற்கு உதவும். எதிர்பாராத பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும். தனுசு ராசிக்காரர்கள் இன்று உடற்பயிற்சியில் தங்களது ஆற்றலை செலுத்த வேண்டும். யோகா அல்லது வெளி செயல்பாடுகளில் ஈடுபடுவது உங்கள் ஒட்டுமொத்த நலனுக்கு நல்லது. உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 22, அதிர்ஷ்ட நிறம் அக்வா மெரைன் ப்ளூ, அதிர்ஷ்ட அடையாளம் கண்ணாடி ஜன்னல்.
மகரம்:
இன்று உங்களுடைய காதல் வாழ்க்கை நிலையானதாகவும், அர்ப்பணிப்பு மிகுந்ததாகவும் இருக்கும். உறவுகளுக்கு இடையே வலுவான அடித்தளத்தை அமைப்பது அவசியம். உங்களுடைய நட்பு வட்டாரத்தில் நம்பிக்கை மற்றும் சார்ந்து இருத்தலுக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். கடுமையான உழைப்பு மற்றும் ஒழுக்கம் வேலையில் வெற்றி பெறுவதற்கு உதவும். மனதிற்கு அமைதியையும், ஓய்வளிக்க கூடிய செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 17, அதிர்ஷ்ட நிறம் நியான் பச்சை, அதிஷ்ட அடையாளம் அரச மரம்.
கும்பம்:
இன்று காதல் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்களை அனுபவிப்பீர்கள். உங்களுடைய தனித்தன்மை உறவை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் மனதார ஏற்றுக் கொள்வது உறவுகளுக்குள் இருக்கும் பிணைப்பை வலுவாக்கும். உங்களிடம் இருக்கக்கூடிய தனித்துவமான யோசனைகள் மூலமாக வேலையில் வெற்றி காண்பீர்கள். உங்களுடைய மனநலனுக்கு முன்னுரிமை தர வேண்டிய நாள் இது. உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 56, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், அதிர்ஷ்ட அடையாளம் இரும்பு அட்டை.
மீனம் :
காதல் வாழ்க்கை உணர்வு பூர்வமானதாக இருக்கும். நட்பில் நம்பிக்கைக்கும், உள்ளுணர்வுக்கும் முக்கியத்துவம் தாருங்கள். ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்துவது மற்றும் புரிந்து கொள்வது உறவை வலுவாக்கும். பொருளாதார நிலைப்பாடு மற்றும் வளர்ச்சி இன்றைய நாளில் உங்களுக்கு சாத்தியமாகும். சுய பராமரிப்பு மற்றும் மனநிலை கவனம் செலுத்துவது இன்றைய நாளை சிறப்பாக்கும். உங்களுக்கு உட்புற அமைதி மற்றும் ஓய்வு அளிக்கக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்களுக்கான அதிர்ஷ்ட எண் 29, அதிர்ஷ்ட நிறம் கிரீம், அதிர்ஷ்ட அடையாளம் தொல்பொருள்.