Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – மார்ச் 05, 2024 – செவ்வாய்க்கிழமை

மேஷம்:

இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடனான புரிந்துணர்வு அதிகரிக்கும். பணியிடத்தில் நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். உங்கள் உயர் அதிகாரிகளிடம் இருந்து அங்கீகாரம் கிடைக்கும். தியானம், யோகா போன்றவை உங்கள் மனதுக்கு அமைதியைத் தரும்.

ரிஷபம்:

உங்கள் திருமண வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் கனவுகளை வளர்த்துக் கொள்வதற்கான தருணம் இது. உறவுகளில் நல்லிணக்கம் ஏற்பட பொறுமையும், புரிந்துணர்வும் தேவை. பணியிடத்தில் நீங்கள் காட்டும் ஈடுபாடு தொடர்பாக சக ஊழியர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும்.

மிதுனம்:

பிறருடன் அறிவார்ந்த தொடர்புகள் அதிகரிக்கும். விவாதங்களை அர்த்தமுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்லுங்கள். புரிந்துணர்வு அதிகரிக்க உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் சவாலான சூழல்களை எதிர்கொள்ளும் உங்கள் திறன் மேலோங்கும்.

கடகம்:

உங்கள் காதல் வாழ்க்கையில் உளப்பூர்வமான ஆதரவு அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரிய நபருடன் பலனுள்ள வகையில் நேரத்தை செலவிட வேண்டும். பணியிடத்தில் உங்கள் அறிவார்ந்த திறனை பயன்படுத்தி மிக முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். சமையல் அல்லது தோட்டப் பராமரிப்பு உங்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தும்.

சிம்மம்:

உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அன்பை வெளிப்படுத்துங்கள் மற்றும் அவர்களை பாராட்ட தவறாதீர்கள். அலுவலகத்தில் உங்கள் தலைமைத்துவ பண்புகள் மேலோங்கும். நடனம் ஆடுவது அல்லது இசைக்கருவியை இசைப்பது உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

கன்னி:

நீங்கள் யதார்த்த எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். உங்கள் உறவுகளில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் உங்களுடைய அபாரமான திறமையால் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்வீர்கள். புதிர் விளையாட்டு உங்கள் புத்திகூர்மையை மேம்படுத்தும்.

துலாம்:

உங்கள் உறவுகளில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றால் சமரச நிலையை கடைப்பிடிக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் ராஜீய சிந்தனை மற்றும் கூட்டு ஒத்துழைப்பு ஆகியவை வெற்றியை தேடித் தரும். பெயிண்டிங் செய்வது உங்கள் மனதிற்கு ஊக்கமளிக்கும்.

விருச்சிகம்:

உங்கள் காதல் வாழ்க்கையில் உணர்வு மேலோங்கி இருக்கும். உங்கள் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள மனதில் உள்ள விருப்பங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி அல்லது தியானம் உங்களுக்கு மன அமைதியை தரும்.

தனுசு:

உங்கள் வாழ்க்கைத் துணையுடனான அனுபவங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் பசுமையான நினைவுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். பணியிடத்தில் உங்கள் ஆர்வத்திற்கு அங்கீகாரம் மற்றும் வெற்றி கிடைக்கும். மலையேற்றம் செய்வது குதூகலத்தை ஏற்படுத்தும்.

மகரம்:

உங்கள் வாழ்க்கைத் துணை அவர்களுடைய விருப்பங்களை உங்களிடம் வெளிப்படுத்துவார்கள். பலமான உறவை கட்டமைத்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் நீங்கள் காட்டும் மன உறுதி காரணமாக நினைத்த காரியங்களை நிறைவு செய்வீர்கள்.

கும்பம்:

இன்றைக்கு வெளிப்படையான விவாதங்களை செய்வீர்கள். குறிப்பாக குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பணியிடத்தில் உங்கள் புத்தாக்க சிந்தனை அதிகரிக்கும். உங்கள் அறிவாற்றலை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மீனம்:

இன்றைய நாளில் கருணை மேலோங்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு மனப்பூர்வமான ஆதரவை தெரிவிக்கவும். பணியிடத்தில் புத்தாக்க சிந்தனையின் மூலமாக வெற்றி பெறுவீர்கள். வாசித்தல் உங்களுக்கு மன அமைதியை தரும். பணிகளுக்கு இடையே ஓய்வு தேவை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *