Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 24, 2024 – சனிக்கிழமை
மேஷம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் குதூகலமும், நல்லிணக்கமும் ஏற்படும். உங்கள் உறவு தற்போது பாசிட்டிவ் திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உங்கள் பணி வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்பட இருக்கிறது. வெற்றி பெறும் திறன் உங்களுக்கு உள்ளது என்றாலும் போட்டியில் கவனம் தேவை.
ரிஷபம்:
ஏற்கனவே உள்ள உறவுகளை பலப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அன்புக்கு உரிய நபர்களுடன் உளப்பூர்வமான பிணைப்பு மேலோங்கும். உங்கள் பணி சார்ந்த பொருளாதார வெற்றிகளை அடைவீர்கள். உங்கள் மன நலன் மேம்படும். பயணங்கள் பலன் அளிப்பதாக அமையும்.
மிதுனம்:
உங்கள் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதில் உரையாடல் மிக அவசியம். பிறருடன் உண்மையை பேச வேண்டும். காதல் உறவுகளை அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்வீர்கள். பணி சார்ந்து புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். செலவுகளை செய்யும்போதும், முதலீடு செய்யும்போதும் கவனம் தேவை.
கடகம்:
காதலை மையப்படுத்திய புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளீர்கள். உங்கள் பணி சார்ந்து அபரிமிதமான வளர்ச்சியை அடைவீர்கள். மாற்றங்கள் நிகழும்போது அமைதியாக அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள உறவுகள் பயனுள்ளதாக அமையும். பயணங்கள் அனுபவத்தை தரும்.
சிம்மம்:
உங்கள் வாழ்க்கைத் துணயுடனான உரையாடல் தெளிவானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டும். பணி சார்ந்து எதிர்பாராத வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பயணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை தருவதாக அமையும். நீங்கள் பாதுகாப்பாக உணருவீர்கள்.
கன்னி:
உங்கள் உறவுகளில் நல்லிணக்கமான சூழலில் நீங்கள் நுழைய இருக்கிறீர்கள். இரண்டு நபர்களுக்கு இடையிலான வாக்குவாதத்தின்போது சமரசம் செய்து வைக்க வேண்டியிருக்கும். உங்கள் பழைய முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் ஆழ்மன நலனில் அக்கறை செலுத்துங்கள்.
துலாம்:
காதலை ஏற்றுக் கொள்ள தயாராக இருங்கள். மன்னிப்பு மற்றும் கருணை குணங்கள் மிக அவசியம். ஆன்மீக பழக்க வழக்கங்கள் நன்மை அளிக்கும். இந்த உலகம் உங்களுக்கு வழங்கியுள்ள விஷயங்களுக்கு நன்றி உள்ளவராக இருக்க வேண்டும். பாசிட்டிவ் மாற்றங்களை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்:
பலமான நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். அர்த்தமுள்ள தொடர்புகளை ஏற்படுத்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்களுக்கான அறிவு வளர்ச்சி மேலோங்க இருக்கிறது. பிறருடைய வெற்றியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
தனுசு:
உங்கள் அன்புக்குரிய நபர்களுடன் பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும். புத்தாக்க சிந்தனையுடன் செயல்படுவீர்கள். வெற்றி அடைய வேண்டும் என்றால் புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். புதிய இடங்களுக்குப் பயணம் செய்வீர்கள்.
மகரம்:
புதிய காதல் உறவை ஏற்படுத்திக் கொள்ள நீங்கள் தயாராகி வருகின்றீர்கள். உங்கள் திறனுக்கு ஏற்ற இலக்குகளின் மீது கவனம் செலுத்தவும். உங்கள் துறை சார்ந்த நபர்களிடம் இருந்து கிடைக்கும் ஆலோசனை பயன் உள்ளதாக அமையும். சந்தேகம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும்.
கும்பம்:
உங்கள் காதல் உறவில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வு மேலோங்கும். உங்கள் பணி சார்ந்து வெற்றி கிடைக்கும். ஆனால், உங்கள் திறன்களின் மீது உங்களுக்கு சந்தேகம் ஏற்படலாம். உங்கள் சுய தேவைகள் குறித்து அக்கறை செலுத்துங்கள். மனதிற்கு புத்துணர்ச்சி தேவை.
மீனம்:
காதல் உறவு மேலோங்க இருக்கிறது. உங்கள் பணி சார்ந்து நீங்கள் சவால்களை எதிர்கொண்டாலும் அதை எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். தடைகளை கடந்து வர உங்கள் ஆழ்மன பலத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. பயணங்கள் பலன் தருவதாக அமையும்.