Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – மார்ச் 07, 2024 – வியாழக்கிழமை

மேஷம்:

இன்றைக்கு உங்களுக்கு நிறைவான ஆற்றல் கிடைக்கும். இதனால் அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வீட்டில் சௌகரியம் மற்றும் பாதுகாப்பு உணர்வு அதிகரிக்கும். பணியிடத்தில் சிரமங்கள் நீடித்தாலும் அதை நீங்கள் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்:

உங்களைச் சுற்றியுள்ள அழகான விஷயங்களை ரசிக்கவும். உங்கள் காதலுக்கு உரியவர்களுடன் உளவியல் ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்தவும். உங்கள் திறன்களின் மீது நம்பிக்கை வைத்தால் தான் எதிர்கால இலக்குகளை நிறைவு செய்ய இயலும்.

மிதுனம்:

முன் எப்போதும் இல்லாத வகையில் உங்கள் மூளை இன்று சுறுசுறுப்பாக இயங்கும். உறவுகளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உரையாடல் மிக அவசியம். பணியிடத்தில் எத்தகைய சிக்கல் நிலவினாலும் அதை எதிர்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கிறது.

கடகம்:

உங்கள் உணர்வுகள் இன்று அதிகமாக இருக்கும். உங்கள் வாழ்வில் தொடர்புடைய அனைவர் மீதும் அக்கறை செலுத்துங்கள். பணியிடத்தில் உங்கள் பொறுமைக்கு சோதனை ஏற்படலாம். இருப்பினும் சரியான திசையில் பயணம் செய்வீர்கள். ஊக்கமுடன் இருந்தால் இலக்குகளை அடையலாம்.

சிம்மம்:

உங்கள் மனோபலம் இன்று வெளிப்படும். வீட்டில் உங்களைச் சுற்றியிலும் நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்திக் கொள்ளவும். பணியிடத்தில் சிரமங்கள் இருந்தாலும் உங்கள் நம்பிக்கையால் அதை எதிர்கொள்வீர்கள். உங்கள் சுற்றுப்புற பகுதிகளுக்கு பயணம் செய்து புதுமையான அனுபவங்களைப் பெறலாம்.

கன்னி:

எந்தவொரு காரியத்தையும் துல்லியமான கண்ணோட்டத்துடன் அணுகுவீர்கள். வீட்டில் இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொள்ளவும். பணியிடத்தில் வருகின்ற சவால்களுக்கு உங்கள் திறமையினால் தீர்வு காண்பீர்கள். கவலையை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவும்.

துலாம்:

உங்கள் மனம் உங்களுக்கு நல்ல வழியை காட்டும். வீட்டில் அமைதியை ஏற்படுத்த முக்கியத்துவம் கொடுக்கவும். பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட நபர்களுடன் உங்கள் தொடர்புகளை விரிவுப்படுத்திக் கொள்ள முக்கியத்துவம் கொடுக்கவும். பணிகளுக்கு இடையே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்:

உளப்பூர்வமான பந்தம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதற்கான சூழலை உங்கள் வீட்டில் உருவாக்கவும். பணியிடத்தில் வரக் கூடிய எந்தவொரு சவாலையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள். பயணத் திட்டங்கள் குறுகியதாக இருக்கும். உங்கள் மனநலன் குறித்து அக்கறை செலுத்தவும்.

தனுசு:

காதலில் புதிய அனுபவங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் உங்கள் புத்தாக்க சிந்தனைகளை செயல்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பாசிட்டிவ் சிந்தனையுடன் செயல்பட்டால் பணியிடத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளலாம். இலக்குகளின் மீது ஈடுபாடு தேவை.

மகரம்:

உங்கள் மன உறுதி உங்களுக்கு வழிகாட்டும். காதல் உறவுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நீண்டகால இலக்குகளை நோக்கி பயணம் செய்யவும். சீரான வாழ்வியல் நடவடிக்கையை கடைப்பிடித்தால் மட்டுமே ஆரோக்கியத்தை தக்க வைக்க முடியும். ஒழுக்கம் இருந்தால் வெற்றி அடையலாம்.

கும்பம்:

இன்றைக்கு உங்களுக்கு புகழ் வெளிச்சம் கிடைக்கும். வீட்டில் புத்தாக்க நடவடிக்கைகளை முயற்சி செய்யலாம். பணியிடத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதற்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் பயணத் திட்டங்களை ஒத்திவைக்க நேரிடும். உங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மீனம்:

எந்தவொரு சந்தேகத்திற்கும் உங்கள் ஆழ்மனம் தீர்வளிக்கும். வீட்டை அமைதியின் சொர்க்க புரியாக மாற்றிக் கொள்ளவும். பணியிடத்தில் எந்தவொரு சிக்கல் நிலவினாலும் அதை எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *