Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – மார்ச் 13, 2024 – புதன்கிழமை
மேஷம்
வீட்டில் சமநிலையான சூழ்நிலையை உருவாக்குவது அவசியம். உங்களுடைய தற்போதைய வேலை நிலையானதாகவும், சாதனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். முதலீடுகள் செய்யும்பொழுது எச்சரிக்கையாக இருப்பதன் மூலமாக ஒரு சில பொருளாதார பலன்களை அடையலாம். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெரியவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது.
ரிஷபம்
குடும்பத்தார் உங்களிடம் கனிவாகவும், ஆதரவாகவும் நடந்து கொள்வார்கள். இன்று வேலையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கூடிய விரைவில் பொருளாதார பலன்களை பெறுவீர்கள். நல்ல ஆரோக்கியம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
மிதுனம்
குடும்பத்தில் ஒரு சில உணர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். உறவினர்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டு தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்கவும். எந்த ஒரு முதலீடுகளை செய்வதற்கு முன்பும் சட்ட ரீதியான ஆலோசனைகளை பெறுவது நல்லது. சுய பராமரிப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய நேரம் இது.
கடகம்
குடும்பத்தாருடன் பழகுவதில் வரம்புகளை அமைத்துக் கொள்வீர்கள். பணியிடம் ஆதரவளிக்கக் கூடியதாகவும், மன நிறைவு தருவதாகவும் அமையும். தற்போதைய வேலையை விட புதிய ஒரு கெரியர் ஆப்ஷனை தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லது. முதலீடுகள் செய்யும் பொழுது அதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் நன்மைகளை ஒப்பிட்டு பார்த்து முடிவு எடுக்கவும்.
சிம்மம்
வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொறுமை காப்பது அவசியம். பிறரை பாதுகாக்கவோ அல்லது உதவி செய்யவோ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். சிறு சிறு தகவல்களுக்கு கூட முக்கியத்துவம் அளிப்பது நல்லது. மருந்துகள் சாப்பிடுவதை குறைத்து விடுவீர்கள். உங்கள் மனதில் இருக்கக்கூடிய கோபம் தணிந்து பிறரை மன்னித்து ஏற்கக் கூடிய பக்குவத்திற்கு வருவீர்கள்.
கன்னி
குடும்ப வாழ்க்கை யதார்த்தமாகவும், நிலையானதாகவும் இருக்கும். உறவினர்கள் அல்லது உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய நபர்களிடமிருந்து மனதளவில் விலகி நிற்பீர்கள். வேலைக்கு தேவையான உங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்வீர்கள். வரக்கூடிய வாரத்தில் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். முதலீடு சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன்பு தேவையான வழிகாட்டுதலை பெறுங்கள்.
துலாம்
உடன் பணிபுரிபவர்களுடன் ஒரு குறிப்பிட்ட வரம்பை அமைத்துக் கொள்வது நல்லது. பணி சூழல் அமைதியானதாகவும் உங்களுக்கு உதவிகரமானதாகவும் இருக்கும். கூடிய விரைவில் உங்களுக்கு சாதகமான பொருளாதார மீட்டெடுப்பை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வெளிப்படையான மற்றும் நேர்மையான விவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
விருச்சிகம்
பிறரை மன்னித்து உங்கள் மனதில் இருக்கக்கூடிய காயங்களுக்கு நீங்களே மருந்து போட்டுக் கொள்வீர்கள். நெருங்கிய நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையில் பெரிய பொறுப்புகளை ஏற்று நடப்பீர்கள். பொருளாதாரத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உங்களிடம் இருக்கக்கூடிய பாசிட்டிவான விஷயங்களை பயன்படுத்துங்கள். சுய பராமரிப்பிற்கு நேரம் ஒதுக்கவும்.
தனுசு
வீட்டில் புதிய துவக்கங்களை வரவேற்பீர்கள். உதவிக்கும் வழிகாட்டுதலுக்கும் குடும்பத்தாரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். தற்போதைய நிறுவனத்தில் நீங்கள் வைத்திருக்கக்கூடிய திட்டங்களை ஆய்வு செய்து, புதிய ஆப்ஷன்களை யோசிப்பது நல்லது. பொருளாதாரத்தில் படிப்படியான அதே நேரத்தில் நிலையான முன்னேற்றம் இருக்கும். எந்த ஒரு முதலீடு செய்வதற்கு முன்பும் அனுபவம் பெற்ற நபர்களை ஆலோசிப்பது அவசியம்.
மகரம்
உங்களுடைய கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலமாக வாழ்க்கை சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துகிறீர்கள். உங்களுடைய வெற்றியை மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவீர்கள். வேலையில் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெறுவீர்கள். நீண்ட கால பலன்களுடன் கூடிய பொருளாதார முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
கும்பம்
வீட்டில் நிலவும் சிக்கல்களை உணர்வுப்பூர்வமாக அணுகி அதற்கான தீர்வை பெறுவீர்கள். குடும்பத்தாருடன் பேசும் பொழுது எதையும் வெளிப்படையாக பேசி விடுவது நல்லது. வேலையில் பழைய யுக்திகளை கையாளுவீர்கள். பொருளாதார தேக்கத்தை எதிர்பார்க்கலாம். முதலீடு சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன்பு பெற்றோரின் ஆலோசனையை பெறுங்கள்.
மீனம்
ஆலோசனை மற்றும் உதவிக்கு குடும்பத்தாரின் உதவியை நாடுவீர்கள். அலுவலகத்தில் நாள் முழுவதும் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அனுபவம் பெற்றவர்களின் ஆலோசனைகளை பெறவும். உங்களுடைய மன நலனில் கவனம் செலுத்துவது அவசியம்.