விமானத்தில் பயணித்த போது ஏற்பட்ட பாதிப்பு.. அவசரமாக மடுத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட – இந்திய வீரர்
இந்தியாவில் தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரின் நான்காவது சுற்று போட்டிகளானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த நான்காவது சுற்றுக்கான போட்டிகளில் கர்நாடக அணியும் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக இருந்த மாயங்க் அகர்வால் கர்நாடக அணியின் கேப்டனாக ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் திரிபுரா அணியுடனான வெற்றிக்கு பின்னர் தனது அணி வீரர்களுடன் அகர்தலாவிலிருந்து சூரத் செல்ல விமான நிலையம் சென்றிருந்தார்.
அப்போது மாயங்க் அகர்வால் திடீரென தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையால் இரண்டு முறை வாந்தி எடுத்ததாக கூறியுள்ளார். பின்னர் விமானத்திலிருந்து இறக்கப்பட்ட அவர் அவசர அவசரமாக அகர்தலாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் அவர் தற்போது ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அகர்வால் எதற்காக வாந்தி எடுத்தார்? அவருக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் அவருடைய உடல்நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் : தற்போது அவரது உடல்நிலை குறித்து சரியான தகவல் எங்களுக்கு கிடைக்கவில்லை. அவரது உடல்நிலை குறித்து கூடுதல் தகவல்களை பெற நாங்கள் முயற்சித்து வருகிறோம்.