டி20 உலககோப்பையில் இந்த இந்திய வீரரால் ஆபத்து-அனைத்து அணிகளுக்கும் ஜாம்பவான் வீரர் எச்சரிக்கை
வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை அணியில் களமிறங்க போகும் அனைத்து வீரர்களுக்கும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் வெர்னன் பிளாண்டர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தென்னாப்பிரிக்கா அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 225 விக்கெட்டுகளை வெர்னன் பிலாண்டர் கைப்பற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய வீரர் பும்ரா ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்ததற்கு பிளாண்டர் பாராட்டி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் நடப்பு உலக கிரிக்கெட் ஒரு முழுமைப்பெற்ற வேக பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா தான். அவரிடம் எல்லையற்ற திறமைகள் இருக்கிறது.
பந்து எவ்வாறு பிடித்து பேஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்து வீச வேண்டும் என்பது குறித்து நன்றாக அறிந்திருக்கிறார்.இதனால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வெற்றி பெறுகிறார். ஆரம்ப காலகட்டத்தில் பும்ரா பந்து வீசும் போது அனைத்து பந்துகளுமே விக்கெட் எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்வார். இதன் காரணமாக அவர் ஓவரில் ரன் கசிய வாய்ப்பு இருந்தது.
தற்போது எப்படி பந்து வீச வேண்டும் என்பதை கற்றுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பும்ரா புதிய பந்தை நன்றாக ஸ்விங்கும் செய்கிறார்.ஸ்டெம்மை நோக்கியும் பந்து வீசுகிறார். இது பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். மேலும் பந்து வீசும் போதே பல மாற்றங்களையும் செய்கிறார். யாக்கர்களையும் வீசுகிறார்.
இதுபோன்ற திறமை தான் டி20 உலக கோப்பை தொடரில் உங்களுக்கு தேவைப்படும். டி20 உலக கோப்பையில் பும்ராவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். அந்தத் தொடரிலே மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெயரை அவர் பெறுவார்.ஒவ்வொரு முறையும் தென்னாப்பிரிக்காவுக்கு வரும்போது இந்திய அணி கடந்த தொடர்களை விட சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டிய பிளாண்டர்.
அதற்கு விராட் கோலியின் தொலைநோக்குப் பார்வை ஒரு காரணம் என்று கூறி இருக்கிறார். இந்திய அணி தற்போது நல்ல வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்கி வருவதற்கு விராட் கோலியின் பங்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிலாண்டர். வேகப்பந்துவீச்சாளர்களின் வாழ்க்கையை கடினமாக்கக்கூடிய பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்கிறார் என்று பாராட்டி இருக்கிறார்.
மேலும் இந்திய அணி தங்களுடைய வேக பந்துவீச்சாளர்களை நல்ல முறையில் ஓய்வு கொடுத்து பெரிய தொடருக்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் பிலாண்டர் அறிவுரை வழங்கியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் தம்மை பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக ஏதேனும் அணி அழைத்தால் பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.