விடிய விடிய “நிர்வாண”பார்ட்டி! டாப் பிரபலங்கள் கலந்து கொண்ட இரவு விருந்து! வெடித்த சர்ச்சை

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பார்டி ஒன்றில் அந்நாட்டின் டாப் பிரபலங்கள் அனைவரும் கிட்டதட்ட நிர்வாணமாகக் கலந்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவில் அதிபராக இருப்பவர் புதின். கடந்த 2000ஆம் ஆண்டு முதலே ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் புதின். அங்கே எதிர்க்கட்சிகளையும் தனக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் காலி செய்வதை புதின் வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

இதற்கிடையே அவரது அரசுக்கு எதிராக இப்போது ரஷ்யாவில் குரல்கள் எழுந்துள்ளது. ரஷ்யாவின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் புதின் காக்கத் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளனர்

பார்ட்டி: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த நள்ளிரவு பார்ட்டி ஒன்று தான் இப்போது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. விடிய விடிய நடந்த இந்த பார்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பிரபலங்கள். இரவு முழுக்க பார்ட்டி நடத்துவதால் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். இந்த பார்ட்டியின் டிரஸ் கோட் தான் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதில் கலந்து கொண்ட அனைவருமே கிட்டத்தட்ட நிர்வாண உடையை அணிந்திருந்தனர். இதுவே சர்ச்சைக்குக் காரணமாக இருக்கிறது. ஆடைகள் இல்லாமல் இவர்கள் நடத்திய பார்ட்டின் நாட்டின் விழுமியங்களுக்கு எதிராக இருப்பதாகப் பலரும் சாடியுள்ளனர். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள பிரபல இரவு விடுதியான முட்டாபோரில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

பிரபலங்கள்: இதில் ரஷ்யாவின் பிரபல டாப் நட்சத்திரங்களான பிலிப் கிர்கோரோவ், லொலிடா மற்றும் டிமா பிலன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், 2018இல் ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிவி தொகுப்பாளர் க்சேனியா சோப்சாக் என்பவரும் இந்த நிர்வாண பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதை எல்லாம் விட ரஷ்ய அதிபர் புதினால் வளர்க்கப்படும் (goddaughter) க்சேனியா சோப்சாக் என்பவரும் இதில் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது போகப் பல பிரபலங்கள், பல அரசியல்வாதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக ரஷ்ய அரசியல்வாதி மரியா புட்டினா என்பவரும் இந்த விவகாரத்தில் ரஷ்ய அரசைச் சரமாரியாகச் சாடியுள்ளார். மேலும், நிர்வாண நடனங்களும் இதில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

கிளம்பிய எதிர்ப்பு: மரியா புட்டினா தனது எக்ஸ் பக்கத்தில், “ரஷ்யாவின் கலாச்சாரம் பாரம்பரியம் ஆகியவற்றை தூக்கிப் போடும் வகையில் இந்த பார்ட்டியை நடத்தியுள்ளனர். தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக இந்த பார்ட்டி நடந்தது போலத் தெரிகிறது. இது ரஷ்யாவின் பாரம்பரியத்தை மீறுகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து யெகாடெரினா மிசுலினா என்ற சமூக செயற்பாட்டாளர் கூறுகையில், “ரஷ்யாவின் மதிப்பையும் கலாச்சாரத்தையும் காலில் போட்டு மிதிப்பது போல இந்த நிகழ்வு இருக்கிறது. ரஷ்ய மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த பார்டி தேவையற்றது. ரஷ்யாவில் ஆளும் வர்க்கத்தினரும் பிஸ்னஸ்மேன்களும் வேறு ஒரு நாட்டில் இருப்பதைப் போலச் சொகுசு வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், பார்ட்டியின் இரண்டாவது நாளன்று அந்நாட்டு போலீசார் அதிரடி ஆய்வை நடத்தினர். இரண்டாவது நாளும் பார்ட்டி நடந்தது என்றாலும் கூட அதில் ஆபாசமாக எதுவும் போலீசாருக்கு சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *