தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள் ஏலத்தில் விற்பனை.. 15,440 ரூபாய் சொத்து 2 கோடிக்கு விற்பனை..!!
இந்தியாவில் இன்றும் தேடப்பட்டுவரும் பயங்கரவாதியான தாதா தாவூத் இப்ராஹிம்முக்கு மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் உள்ள அவரது பால்யகால வீடும், மூன்று பிற சொத்துகளும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
இந்த சொத்துகள் அனைத்தும் தாவூது இப்ராஹிம்மின் குடும்பத்தாருக்குச் சொந்தமாக இருந்தன. இந்த சொத்துகள் தாவூதி இப்ராஹிம்மின் தாயார் அமீன பீவி பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலவாணி மோசடியாளர்கள் சட்டம் 1976 இன் கீழ் இந்த ஏலம் நடத்தப்பட்டது. தெற்கு மும்பையில் உள்ள ஆயகர் பவனில் ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்குப் பட்டியலிடப்பட்ட நான்கு சொத்துகளில் இரண்டுக்கு மட்டும் நான்கு மற்றும் மூன்று கோரிக்கைகள் வந்தன. இந்த ஏலத்தில் இரு சொத்துக்களையும் ஒரே நபர் விலைக்கு எடுத்தார். மீதமுள்ள இரண்டு சொத்துகளுக்கு யாரும் ஏலம் கேட்கவில்லை. மற்றொரு விவசாய நிலத்துக்கு நடைபெற்ற ஏலத்தில் அந்தச் சொத்து 15,440 என்ற அடிப்படை விலையில் இருந்து ரூ.2.01 கோடிக்கு விலை போனது. இந்த ஏலத்தில் மொத்தம் நான்கு ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். இதுதவிர வேறு ஒரு விவசாய நிலம் ரூ.3.28 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்தச் சொத்துகளை ஏலம் எடுத்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனாலும் தில்லியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் இந்த சொத்துகளை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தாதா தாவூது இப்ராஹிம்மின் 17க்கும் மேற்பட்ட சொத்துகள் கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி மோசடிக்காரர்கள் சட்டத்தின்கீழ் ஏலத்துக்கு விடப்பட்டது. மும்பையில் 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தாவூது இப்ராஹிம் முக்கியக் குற்றவாளியாக உள்ளார். 1983 ஆம் ஆண்டில் அவர் மும்பைக்கு குடிபெயர்வதற்கு முன்பாக மும்பாகே என்ற கிராமத்தில் வசித்து வந்தார். தாவூது இப்ராஹிம்மை உலக மகா பயங்கரவாதி என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு தீர்மானம் 1267இன் கீழ் அறிவித்துள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்குப் பின்னர் தாவூது இப்ராஹிம் இந்தியாவிலிருந்து தப்பி பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார். அவருக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் தந்து பாதுகாத்து வருகிறது. அண்டை நாடாக இருந்தபோதிலும் இந்தியாவிடம் உள்ள பகையை வைத்து தாவூது இப்ராஹிம்மை அந்த நாட்டு அரசு பாதுகாக்கிறது. அதன் பிறகு அவர் வெளி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்பதில்லை. தலைமறைவாகவே வாழ்க்கை நடத்துகிறார். மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் வழக்கில் தாவூது இப்ராஹிம் கூட்டாளியும் உறவினருமான டைகர் மேமன் கைது செய்யப்பட்டு ஆர்தர் சாலை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்குத்தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.