மத்திய காஸா மீது மரண தாக்குதல் – புகைப்படங்கள்
டெய்ர் அல்-பலாஹ்: மத்திய காஸா மீதான போரில், மிக மோசமான தாக்குதலை இஸ்ரேல் படை நடத்தியதில், குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காஸாவில் நடந்த போரின் மிக மோசமான தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் இஸ்ரேலின் தலைவர்கள், காஸா மீதான போரின் போது, வார இறுதியில் நடந்த கடும் தாக்குதலில் இஸ்ரேலிய வீரர்கள் 15 கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த மரண தாக்குதலானது டெய்ர் அல்-பலாவின் கிழக்கே உள்ள மகாசி அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்டுள்ளது.
காஸா சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா, இந்த தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாகவும், எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறினார்.
சம்பவ இடத்தில் இருந்த அசோசியேட் பிரஸ் செய்தியாளர், குழந்தைகள் உட்பட ஏராளமான உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதைப் பார்த்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நிறைவுபெற்றவுடன், முற்றுகையிடப்பட்ட காஸா பகுதிக்குள்ளிருந்து புகை எழுந்தது, அதே நேரத்தில் மேற்குக் கரையில் பெத்லஹேம் அமைதியாக இருந்தது, ஆனால், அதன் விடுமுறை கொண்டாட்டங்கள் நின்றுவிட்டன.
அண்டை நாடான எகிப்தில், இஸ்ரேலால் பிடிக்கப்பட்ட பாலஸ்தீனிய பணயக்கைதிகளை ஒப்படைப்பதற்கான மற்றொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன.
காஸா பகுதியில் தரைவழித் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய படை வீரர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 154 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தெற்கு இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்த ஹமாஸ் தலைமையிலான போராளிகள் பொதுமக்களைத் தாக்கி 1,200 பேரைக் கொன்று, 240 பணயக்கைதிகளை கடத்திச் சென்றதால் இந்த போர் மூண்டது.
இந்தப் போர் காஸாவின் பெரும்பான்மையான பகுதிகளை அழித்துவிட்டது, ஏறக்குறைய 20,400 பாலஸ்தீனியர்களை பலிவாங்கியுள்ளது.