தனியார் மருத்துவமனைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
அனைத்து தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அறவிடும் முறைமையை உடனடியாக அறிவிக்குமாறு தனியார் மருத்துவ ஒழுங்குமுறை கவுன்சில் தெரிவித்துள்ளது.
பல தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களுக்கான விலைகளைக் உரிய முறையில் காட்டுவதில்லை என்று கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சில மருத்துவ நிறுவனங்கள் அதிக கட்டணங்களை வசூலிப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.