பிரித்தானிய பிரதமர் ரிஷிக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு: ஆனால்… இதுதான் அரசியல்

பிரித்தானிய மக்களிடையேயும், வாக்காளர்களிடையேயும் பிரித்தானிய பிரதமர் ரிஷிக்கு ஆதரவு குறைந்துவருகிறது. பிரித்தானிய மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அதை நிரூபணம் செய்கின்றன. ஆனால்…
மக்கள் தலைவிதி
சில நாடுகளில், நீண்ட காலமாக இரண்டு கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்வதை கவனிக்க முடியும். ஒரு கட்சி ஆட்சிக்கு வரும். கொஞ்சம் காலத்துக்குப் பிறகு கட்சியினர் ஊழல் செய்வார்கள், மக்கள் பணத்தை சாப்பிடுவார்கள். ஆகவே, அடுத்த தேர்தலில் மக்கள் எதிர்க்காட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள். தோற்ற கட்சி அதிகம் அலட்டிக் கொள்ளாது. ஏனென்றால், அடுத்து அவர்கள்தான் ஆட்சிக்கு வருவார்கள்.
அதற்குக் காரணம், ஆட்சியில் இல்லாத காலத்தில் அவர்கள் திருந்திவிட்டார்கள், ஊழலை கைவிட்டுவிட்டார்கள் என்பது அல்ல. நாட்டை ஆள இவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை. வாக்களிக்க, மக்களுக்கு வேறு கட்சியோ, தகுதியான தலைவரோ இல்லை. புதிதாக வருபவர்களுக்கு ஒரு நாட்டை அளும் அளவுக்கு அனுபவம் வர வெகு காலமாகும். ஆக, இவர்களே மாறி மாறி நாட்டை ஆள்வார்கள். மக்கள், தலைவிதி என எண்ணிக்கொண்டு இவர்களில் ஒருவருக்கு வாக்களிப்பார்கள். அரசு சக்கரம் இயங்கவேண்டுமே!