டீப் ஃபேக் வீடியோ மிரட்டல்: பிரபல பிக்பாஸ் நடிகை சனம் ஷெட்டி போலீசில் புகார்.!!!
கடந்த சில மாதங்களாகவே நடிகைகளுக்கு டீப் ஃபேக் வீடியோ பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோதான் முதலில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
தற்போது கோலிவுட் நடிகைகளும் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், இன்று காலை பிக் பாஸ் புகழ் நடிகை அபிராமி தன்னுடைய போலியான நிர்வாண வீடியோ இணையத்தில் பரவுவது குறித்து வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
இப்போது பிக் பாஸ் மூலம் கவனம் பெற்ற நடிகை சனம் ஷெட்டிக்கும் இதேபோன்ற டீப் ஃபேக் வீடியோ மிரட்டல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தள பதிவில் ஒருவர் தன்னை மிரட்டுவதாகவும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்குப்படியும் காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.