மேகன் மார்க்கல் மீதான அவதூறு வழக்கு: அமெரிக்க நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

மேகன் மார்க்கல் மீது அவரது சகோதரி சமந்தா மார்க்கல் தாக்கல் செய்த அவதூறு வழக்கு அமெரிக்க நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேகன் மார்க்கல் மீது அவதூறு வழக்கு
ஹரி மற்றும் மேகன் மார்க்கல் கலந்து கொண்ட Oprah Winfrey மற்றும் Netflix நிகழ்ச்சிகளில் அவதூறான கருத்துகள் தெரிவித்து இருப்பதாக கூறி அவரது சகோதரி சமந்தா மார்க்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

Oprahவிடம் உரையாடிய நிகழ்ச்சி ஒன்றில் சகோதரியை குறிப்பிட்டு பேசிய மேகன் மார்க்கல், “அவர் ஒரே குழந்தையாக வளர்ந்தார், நான் ஹரியுடன் உறவை தொடர்ந்த பிறகு, சமந்தா தனது குடும்பப் பெயரை மார்க்லே என்று மாற்றிக் கொண்டார்” என தெரிவித்து இருந்தார்.

மேகன் மார்க்கலுக்கும், சமந்தா மார்க்கலுக்கும் ஒரே தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

தள்ளுபடி செய்யப்பட்ட அவதூறு வழக்கு
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த புளோரிடா நீதிபதி சார்லீன் எட்வர்ட்ஸ் ஹனிவெல்(Charlene Edwards Honeywell) அவதூறு குற்றச்சாட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

சமந்தா மார்க்கலால் இந்த வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி தன்னுடைய 58 பக்க தீர்ப்பில், அவதூறு மற்றும் அல்லது அவதூறுக்கான எந்தவொரு முகாந்திரத்தையும் ஆதரிக்கக்கூடிய எந்த ஆதாரங்களையும் வழக்கு வாதி அடையாளம் காணத் தவறிவிட்டார் என தெரிவித்து மேகன் மார்க்கலுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கினார்.

இதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றத்தின் தீர்ப்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என மேகன் மார்க்கல் வழக்கறிஞர் Michael J Kump தெரிவித்துள்ளார்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *