சுவையான சேப்பங்கிழங்கு மோர் குழம்பு: புதுவித ரெசிபி இப்படி செய்து பாருங்க
சுவையான சேப்பங்கிழங்கு மோர் குழம்பு ரெசிபி செய்வது குறித்து இங்கு பாருப்போம்.
தேவையான பொருட்கள்
சேப்பங்கிழங்கு – 300 கிராம்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்- கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சேப்பங்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து வேக வைக்கவும். அது ஆறிய பிறகு தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாய்களை பொடிதாக நறுக்கவும். அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின்னர் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு அதில் சேப்பங்கிழங்கை போட்டுக் கிளறி அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இந்த கலவை கொதித்து தண்ணீர் சற்று சுண்டி வரும் நேரத்தில், ஒன்றிரண்டு சேப்பங்கிழங்கை கரண்டியால் நன்றாக நசுக்கிவிடவும். சிறிது நேரத்தில் குழம்பு கெட்டியாகும். அப்போது அதில் தயிரை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.