சுவையான சிக்கன் டிக்கா கிரேவி… வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

அசைவ உணவுகளில் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஒன்று சிக்கன். சிக்கன் கொண்டு செய்யப்படும் வகை வகையான டிஷ்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதில் ஒன்றுதான் சிக்கன் டிக்கா ரெசிபிகள்.

வார விடுமுறைக்கு ஏற்ற சுவையான சிக்கன் டிக்கா கிரேவியை எளிதான செய்முறையில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். இந்த கிரேவியை சாதம், ரொட்டி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாறலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் மரினேட் செய்ய தேவையானவை :

எலும்பு இல்லாத கோழி – 500 கிராம்

காஷ்மீரி மிளகாய் தூள் – 1.5 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – 1 டீஸ்பூன்

மற்ற பொருட்கள் :

பெரிய வெங்காயம் – 2

தக்காளி விழுது – 5 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

இஞ்சி – 2 துண்டு

பூண்டு – 6 பல்

கடலை மாவு – 1.25 டீஸ்பூன்

ஃப்ரெஷ் கிரீம் – 5 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் – 1.5 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்

சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

காய்ந்த சிவப்பு மிளகாய் – 4

பச்சை ஏலக்காய் – 5

கிராம்பு – 5

இலவங்கப்பட்டை – 2

கசூரி மேத்தி பொடி – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

செயல்முறை:

முதலில் எலும்பில்லாத கோழியை ஓரளவிற்கு சிறிய துண்டுகளாக வெட்டி அதை அலசி எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு கோழியுடன் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து அதை 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியே விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி மாரினேட் செய்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சிக்கன் துண்டுகளை பொன்னிறமாகும் வரை 5 நிமிடங்கள் அதிக முதல் நடுத்தர வெப்பத்தில் வறுத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு மற்றொரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், நுணுக்கிய பச்சை ஏலக்காய், கிராம்பு, பட்டை மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து 30 விநாடிகளுக்கு நன்கு வறுக்கவும்.

அடுத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கலந்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நடுத்தர முதல் குறைந்த வெப்பத்தில் 4-5 நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவும்.

பின்னர் அதில் நுணுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.

பிறகு அதனுடன் ஒன்றரை டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து 2 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் சமைக்கவும்.

இரண்டு நிமிடங்களுக்கு அடுத்து அவற்றுடன் மஞ்சள் தூள், சிகப்பு மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அதில் சிறிதளவு (100 மில்லி) தண்ணீர் சேர்த்து கலந்து வதக்கவும்.

அதை எண்ணெய் பிரியும் வரை 4 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் வதக்கவும்.

பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டில் இருந்து 4 டேபிள் ஸ்பூன் சேர்த்து பிறகு அதில் 50 மில்லி தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை குறைந்த வெப்பத்தில் 4 நிமிடங்கள் கலந்து வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும் தருவாயில் வறுத்து வைத்துள்ள கோழித் துண்டுகளைச் சேர்த்து கலந்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் வத்தகக்கவும்.

பிறகு அதில் கொஞ்சம் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு கலந்து குறைந்த வெப்பத்தில் 2 நிமிடங்கள் வறுக்கவும்.

அடுத்து அதில் சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு கோழி மென்மையாகும் வரை 12 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் மூடி வைத்து சமைக்கவும்.

பின்னர் அதனுடன் கரம் மசாலா, வறுத்து பொடி செய்த கசூரி மேத்தி, ஃப்ரெஷ் கிரீம் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து மூன்று நிமிடங்களுக்கு குறைந்த தீயில் சமைக்கவும்.

தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குறைந்த வெப்பத்தில் சமைத்தால் சுவையான சிக்கன் டிக்கா கிரேவி ரெடி…

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *