சுவைமிகுந்த வெல்லம் சாதம்… வீட்டிலேயே எளிதாக எப்படி செய்யலாம்.?

‘வெல்லம் சாதம்’ என்பது பண்டிகைகள் மற்றும் சிறப்பு தினங்களில் தயாரிக்கப்படும் ஒரு சுவையான இனிப்பு உணவாகும். மேலும் இது அரிசியை வைத்து செய்யப்படும் எளிய செய்முறையாகும்.

அரிசி, வெல்லம், நெய் மற்றும் நட்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி நீங்கள் சமைக்கக்கூடிய எளிதான இனிப்பு உணவு. இதன் சுவையை அதிகரிக்க உங்களுக்கு விருப்பமான பருப்பு வகைகளையும் சேர்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – 400 கிராம்

வெல்லம் பொடி – 250 கிராம்

நெய் – 100 கிராம்

பாதாம் – 1/4 கப்

பச்சை ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி

நட்ஸ்

செய்முறை :

முதலில் தேவையான அளவு அரிசி எடுத்து அதை 4-5 முறை கழுவி சுமார் 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

மிதமான தீயில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதில் கிராம்பு சேர்த்து ஊறவைத்த அரிசியையும் சேர்க்கவும்.

அரிசி மென்மையாகவும், உறுதியாகவும் ஆகும்வரை சமைக்கவும்.

அரிசி வெந்ததும் தண்ணீர் முழுவதையும் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து மிதமான தீயில் ஒரு வாணலியை வைத்து அதில் நெய்யை ஊற்றி உருக்கவும்.

நெய் போதுமான அளவு சூடானதும் அதில் தூள் செய்த வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.

குறிப்பு : வெல்லம் பொடி கிடைக்கவில்லை என்றால் வெல்லத்தை துண்டுகளாக வெட்டி கடாயில் சேர்க்கலாம். வெல்லம் கரைய சிறிது நேரம் எடுக்கும் ஆனால் அதே சுவையை உங்களுக்கு வழங்கும்.

வெல்லம் முழுவதுமாக கரைந்தவுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள கிராம்பு சாதம் மற்றும் பச்சை ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

உருகிய வெல்லத்துடன் அரிசியை நன்கு கலக்கவும். இது அரிசியின் நிறத்தை சிறிது பழுப்பு நிறமாக மாற்றும்.

அடுத்து தீயை மிதமாக குறைத்து வாணலியை ஒரு மூடியால் மூடி அரிசியை சுமார் 5-8 நிமிடங்கள் சமைக்கவும்.

சாதம் நன்கு வெந்தவுடன் உங்களுக்கு விருப்பமான பாதாம் மற்றும் நட்ஸ்களால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *